உலகின் மிகப்பெரிய உலக சாதனை ஓம்லேட் கடந்த "உலக முட்டை தின"மான 2010, October 8 ம் திகதி அன்று தயாரிக்க பட்டதாக துருக்கி போஸ்ட் (Turkish Post) செய்தி வெளியிட்டுள்ளது.
10 மீற்றர் விட்டம் கொண்ட மிகப்பெரிய தட்டமொன்றில் சுமார் 65 சமையலாளர்கள் இணைந்து 110,010 முட்டைகளை பயன்படுத்தி 4,400 கிலோ கிராம் எடையுடைய ஓம்லேட்டை தயாரித்து முடிக்க 2.5 மணித்தியாலங்கள் செலவாகியுள்ளது.
இதனை கின்னஸ் உலக சாதனை பதிவு புத்தகத்தை சேர்ந்த Carim Valerio என்பவர் உலகின் மிகப் பெரிய ஓம்லேட் என்பதனை உறுதிப் படுத்தியுள்ளார்.
உலகின் முட்டை தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.