பிலிப்பைன்ஸ் நாட்டின் நோர்டே மாநிலத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்த 17 வயதுடைய டைனி ஜன்ரி பாலாவிங் (Tiny Junrey Balawing) என்பவரின் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளதுடன்,கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெறவுள்ளார்.
ஜுன் மாதம் 12ம் திகதி 18 வயதை அடையும் போது இந்தப் பெருமையை இவர் தனதாக்கி கொள்ளவுள்ளார்.
தற்போது உலகின் குள்ளமான மனிதரான நேபாளத்தின் கஜேந்திர தாபா மாகாவை (உயரம் 26.4 அங்குலம்) விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.
தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.
நடக்கவும் நிற்கவும் சிரமப்படும் இவர் தனது வருங்கால புகழை எண்ணி மகிழ்ச்சியடையும் இவர் தனது பெற்றோர் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். ஆனால் சகோதரர்கள் மூவரும் நல்ல உயரமானவர்கள்.
13,11 மற்றும் 6 வயதான இவரின் இளைய சகோதரர்கள் பாடசாலை செல்லும் போது இவர் மட்டும் தாயுடன் வீட்டிலேயே இருந்து விடுகின்றார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவரைப் பெற்றோர் இடுப்பில் தூக்கியே சுமக்கின்றனர்.

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.