Thursday, June 23, 2011

கஞ்சி குடிப்பது இதயத்துக்கு நல்லது

லண்டன்,  அன்றாடம் கஞ்சி குடிப்பது இதயத்துக்கு நல்லது என்பது மருத்துவரீதியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
டாக்டர் பிரங்க் தைஸ் என்பவர் தலைமையில் 40 முதல் 65 வயதுக்குள்பட்ட 260 பேரிடம் அபர்தீன் பல்கலைக்கழகம் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைவருக்கும் வழக்கமான உணவு கொடுக்கப்பட்டது. அதில் 3-ல் 1 மடங்குமட்டும் ரொட்டிமட்டுமோ அல்லது கோதுமை கஞ்சி மற்றும் கோதுமை- ஓட்ஸ் கஞ்சி கொடுக்கப்பட்டது.
இதில்  வழக்கமான உணவுடன் கஞ்சிகுடித்தவர்களுக்குமட்டும் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்திருந்தது. இதய நோய் 25 சதமும், பக்கவாதம் வருவது 25 சதமும் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது என டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அன்றாட உணவில்  சிறிதளவு கோதுமை கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடித்தால் அது பெரிய அளவில் இதயத்திற்கு நன்மை செய்கிறது. மாரடைப்போ அல்லது பக்கவாதமோ வரும் அபாயத்தை இது தடுக்கிறது என அமெரிக்க கிளினிகல் நியூட்ரீசன் என்ற சஞ்சிகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.