சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான ‘ஐஏடிஏ’ நடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு:
கடந்த 6 ஆண்டுகளில் நடந்த 75 சிறிய, பெரிய விமான விபத்துகளில் எலக்டிரானிக் சிஸ்டத்துடன் பயணிகளின் எலக்டிரானிக் கருவிகளுக்கு இருந்த தொடர்புகள் பற்றி ஆராயப்பட்டது. ஒரு சம்பவத்தில் 4,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் தானியங்கி இயக் கம் கோளாறு ஆனது.
அதையறிந்ததும் பயணிகளை பணிப்பெண்கள் சோதித்ததில் 4 பயணிகள் செல்போனை ஆன் செய்து இயக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை சுவிட்ச் ஆப் செய்ய செய்தனர். உடனே, விமானத்தின் எலக்டிரானிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு சரியானது.
விமானத்துக்குள் 2 லேப்டாப் பயன்படுத்தப்பட்டபோது கடிகார முள் பின்னோக்கி சென்றதும், கேபினில் இருந்த குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் சரியாக வேலை செய்யாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
செல்போன் மட்டுமின்றி எலக்டிரானிக் கருவிகளை பயணிகள் ஆன் செய்தால் விமானத்தின் இயக்க முறை கோளாறு அடைவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.