Saturday, July 9, 2011

சமையலுக்கு ஏற்ற எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் Saturated Fat என்ற கொழுப்புச் சத்து மிக அதிகம் உள்ளது. எனவே, இந்த எண்ணெயை அவசியம் சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. சமையலுக்கு சிறந்த எண்ணெயாக கருதப்படுவது ஆலிவ் ஆயில் தான். ஆனால், அதன் சுவையை நாம் விரும்பாததாலும், விலையும் அதிகம் என்பதாலும், பெரும்பாலோர் உபயோகிப்பது இல்லை. நாம் உபயோகிக்கும் எண்ணெய் வகைகளில் தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவை மூன்றும் சமையலுக்கு உபயோகிக்கலாம். சமையலுக்கு எண்ணெயை தாளிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொரிப்பதற்காக எந்த எண்ணெயையும் பயன்படுத்தவே கூடாது. அதாவது வடை, பஜ்ஜி, அப்பளம், முறுக்கு, பூரி போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அறவே தவிர்ப்பது சிறந்த உணவு பழக்கமாகும்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.