Wednesday, July 27, 2011

கண் பார்வைக்குறைபாடு.

கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகள் இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
1. "மயோபியா' அல்லது கிட்டப் பார்வை

2. "
ஹைப்பர்மோட்டிரோப்பியா' அல்லது தூரப் பார்வை
மயோபியா'வில், தொலைவில் உள்ள எழுத்துக்கள் மற்றும் பொருட்கள் மங்கலாக தெரியும். அருகில் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியும். இது, பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை, யாருக்கும் வரலாம். பொதுவாக, சிறு வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். தொலைதூர கண்பார்வை குறைவு, தலைவலி, கண்ணில் நீர் வழிதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு, வகுப்பில், போர்டில் எழுதும் எழுத்துக்கள் மங்கலாக தெரிகிறது என்பர். 
மேலும், கண்களை வேகமாக அடித்தல், அதிக சோர்வு நிலை மற்றும் கண்ணை சுற்றி வலி போன்ற பிரச்னைகளும் வரலாம். மயோபியா உள்ளவர்களுக்கு, "மைனஸ் பவர்' இருக்கும். மேற்கண்ட சிரமங்கள் இருந்தால், உடனே கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் போன்ற தீர்வுகள் இதற்கு உண்டு. இந்த தேதியில், பல நவீன முறை சிகிச்சைகள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செய்யப்படுகின்றன. கண்ணாடி அணிவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே, "லாசிக்' எனும் லேசர் முறை சிகிச்சை கொண்டு வரப்பட்டது. "சையாப்டிக்ஸ்' (Zyoptix) எனும் லேசர் முறையில், கண்ணில் இருக்கும், 
"மைனஸ் பவர்' குறைக்கப்படுகிறது. இப்போது, நவீன லேசர் சிகிச்சையான, "இன்ட்ராலேஸ்' (Intralase) முறை மூலம், பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம்.
கருவிழியின் தடிமன் குறைவாக இருப்பின், அதை வெறும், "சையாப்டிக்ஸ்' மூலம் சரி செய்ய இயலாது. ஆனால், "இன்ட்ராலேஸ்' உதவியுடன் இதை முழுமையாக குணப்படுத்த முடியும். மேலும், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்'சில், பக்க விளைவுகள் மிகவும் குறைவாக காணப்படும்.
கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாகவே இருக்கும் நோயாளிகளுக்கு, "ஆர்ப்ஸ்கேன்' (Orbscan)மற்றும் "அபரோமேட்டிரி'(Aberrometry) ஆய்வு செய்யப்பட்டு, பின்னர், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' செய்யப்படும். பொதுவாக கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாக உள்ளவர்கள், இந்த முறை சிகிச்சைக்கு பின், முழுமையான பார்வை பெறுகின்றனர். இதை, "அபரோப்பியா' என்று அழைக்கிறோம்.
லேசர் முறையில், பாதி, "பிலேட்' முறையிலும், பாதி, "லேசர்' (எக்சைமர்) வழியாகவும் சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதுள்ள, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' முறை சிகிச்சையில், லாசிக் சிகிச்சை முழுவதும்,"பெம்டோசெகண்ட்' ((femtosecond) லேசர் மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம், பார்வை குறைபாடு சீராவது மட்டும் இல்லாமல், பார்வைத் திறனும் நன்றாக இருக்கும். இந்த சிகிச்சை முறையில், பக்க விளைவுகளும் குறைவு. லேசர் முறை சிகிச்சையில், பெரும்பாலான பக்கவிளைவுகள் கிடையாது. கண் கூசுவது, கண் உறுத்தல் போன்ற சிறிய விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். அவ்வாறு வந்தாலும், அதற்கு மருந்து மூலம் தீர்வு காணப்படும். 18 வயது நிறைந்தவர்கள், இரண்டு கண்களிலும் பார்வைத் திறன் குறைபாட்டில் சமநிலை அடைந்தவர்கள் மற்றும் கருவிழியில் வேறு எந்த குறைபாடும் இல்லாதவர்கள், இந்த சிகிச்சைக்கு உகந்தவர்கள். சில நேரங்களில், சிறு வயதிலேயே, "அபரோப்பியா' காரணமாக கண் பார்வை குறைவு ஏற்பட்டால், இந்த சிகிச்சை செய்யலாம். இந்த, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' முறை லேசர் சிகிச்சைக்கு, மயக்கம் கொடுக்க தேவையில்லை. கண்களில் சொட்டு மருந்து (Local Anesthesia) மூலமாக உணர்ச்சிகளை குறைக்க வைத்து, லேசர் சிகிச்சை செய்யப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை செய்ய தேவையில்லை. ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை மற்றும் ஆய்வு முடிவுறும். இரண்டு கண்களுக்கும் ஒரே நாளில், ஒரே முறையில் சிகிச்சை பெறலாம். முதல் இரண்டு நாட்கள், கண்ணில் நீர் கசிவு மற்றும் உறுத்தல் இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகளிடம், ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். "ஹைப்பர்மெட்ரோபியா' எனும் கண் குறைபாடு ஏற்பட்டால், தூரப் பார்வை குறைவாக தெரியும். "பிளஸ் பவர்' அதிகமாக இருக்கும். இதற்கும் லேசர் முறை சிகிச்சை செய்யலாம். குழந்தைகளுக்கு கண் குறைபாடு இருந்தால், சிறு வயதிலேயே அதற்கான தீர்வு, கண்ணாடி அணிய வேண்டும். இல்லையெனில், பிற்காலத்தில் கண்பார்வை சீராக வராமல், குறைவாகவே நின்று விடும்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.