Friday, November 25, 2011

20,000 இலங்கையருக்கு தென்கொரியாவில் ஓய்வூதியம்.


தென் கொரியாவில் தொழில் புரியும் சுமார் 20,000 இலங்கையர்களும் கொரியாவின் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள னர். இலங்கையர்களுக்கென 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் படி, சுமார் மூன்று இலட்சம் ரூபா வரையில் இலங்கையர் ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவாக பெறுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக் கிறது.
கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று கடந்த 22ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத் துக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது.
அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க என். விஜேரட்னவும், கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீசியோங் ஹ¥ன் என்பவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அமைச்சர் டிலான் பெரேரா முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தம் ஊடாக ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களின் விபரங்களை அமைச்சுக்கு ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டம் கட்டமாக பெற்றுக் கொடுக்க கொரிய அரசு முன்வந்துள்ளது.
இத்தகவல்களின் அடிப்படையில் இலங்கையரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு அமைச்சினூடாக உறுதிப்படுத்தப்பட்டு கொரிய ஓய்வூதிய திணைக்களத்துக்கு அனுப்பப்படும்.
அனுப்பப்பட்ட தரவுகள் சரியானதாக இருக்கிறது என்பதை கொரிய திணைக்களம் உறுதி செய்த பின்னர் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவருக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். தென் கொரியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டிலான் பெரேராவின் வேண்டுகோளை ஏற்றே கொரிய அரசு இந்த ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்தியுள்ளது.
Thanks to Thinakaran.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.