கிளிறிசிடியா
மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி
பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இந்த
ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப்
பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு, கிளிறிசிடியாவில்
இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய
தனது ஆய்வு அறிக்கையை இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம்
சமர்ப்பித்துள்ளது.
சீனாவின்
உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய
போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிறிசிடியா
மரத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும்
ஏற்படாது எனவும், அத்துடன் மிகக்குறைந்தளவிலான முதலீட்டில் அதிக பயனைப் பெற
முடியும் என்றும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
Thanks to
அறியாத பயனுள்ள தகவல்! நன்றி நண்பரே! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
ReplyDelete