லேசர் ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தபோது, உற்பத்தித் துறையிலிருந்து மருத்துவத் துறை வரை அனைத்துத்
துறைகளிலும் இந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. வரும் 2020-க்குள் சிறிய மூலக்கூறுகளைக் கண்டறியும் வகையில் மிக
நுண்ணிய லேசர் ஒளிக்கற்றைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை
கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் வடிவமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளரான மணிலால் பூமிக், கார்பன் மோனாக்சைடு லேசரைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு, லேசர்
தொழில்நுட்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று விஞ்ஞானிகள் கூறும்
அளவுக்கு அவரது கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருந்தது. அவரைப் போன்று
ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்களையும், விஞ்ஞான
மேதைகளையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தவும், கொண்டாடவும்
தருணம் வந்துள்ளது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.