அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சர்வதேச
எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. பல அறிவியல் கண்டுபிடிப்புகள்
இதில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் பலரையும் அதிசயிக்க வைத்த கண்டுபிடிப்பு
பழைய எலக்ட்ரானிக் பொருட்களை பெற்றுக்கொண்டு பணம் தரும் ஏடிஎம் மெஷின். தேவையற்ற
செல்போன்கள், ஐபாட், ஐபேட்,
எம்பி3 பிளேயர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இதில்
போடலாம். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதை
கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதை பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை
மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது.
தொகை நமக்கு ஓகே என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே
வரும். தொகை கட்டுபடி ஆகாவிட்டால் கேன்சல் என அழுத்த வேண்டும். பொருள் வெளியே
வந்துவிடும்.
பில் போவெல் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்துள்ளார். பழைய எலக்ட்ரானிக் பொருட்களை குப்பையில் வீசுவது தவிர்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த கருத்தை உணர்த்தும் வகையில் ‘ஈக்கோ ஏடிஎம்’ என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார் பில் போவெல். கணிசமான பழைய பொருட்கள் சேர்ந்த பிறகு, அவை அகற்றப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அந்த பொருட்களில் இருந்து பிளாஸ்டிக், உலோகங்கள் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும். இதுபற்றி பில் போவெல் மேலும் கூறுகையில், எலக்ட்ரானிக் கழிவுகளை குப்பையோடு குப்பையாக வீசுவது மிகவும் தவறு. அது மண்வளத்தை பாதிக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இவற்றை பாதுகாப்பான முறையில் அழிப்பது அவசியம். அந்த கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே எலக்ட்ரானிக் குப்பை ஏடிஎம்மை உருவாக்கினேன்’’ என்றார். கண்காட்சியில் இந்த ஏடிஎம்முக்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.