அமெரிக்காவி்ற்கு பொம்மை விமானத்தை அனுப்புகிறது ஈரான்.
ஈரான்
வான்எல்லைப்பகுதியில், அத்துமீறி நுழந்தை அமெரிக்காவின் ஆளில்லா உளவு
விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழத்தப்பட்டது. அந்த விமானத்தை போன்று
மாதிரி பொம்மை விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஈரான் முடிவு
செய்துள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியையொட்டிஉள்ள ஈரான் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.அந்த விமானம் தற்போது ஈரான் வசம் உள்ளது. இதையறித்த அமெரி்க்கா, அந்த ஆளில்லா உளவு விமானத்தை திருப்பிதர ஈரானுக்கு கோரிக்கை விடுத்தது. இது குறித்து ஈரான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக பொம்மை விமானம் ஒன்றை அதே போன்று தயாரித்துள்ளளோம் , 30 செ.மீ. நீளமும், 14 செ.மீ. அகலும் கொண்ட பொம்மை விமானம் 70 ஆயிரம் ரியால், (6 டாலர்) மதிப்புள்ளது. இந்த பொம்மை விமானத்தை, வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரான் நாட்டின் இஸ்லாமிய குடியரசு தோன்றியதன் 34-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது . அப்போது அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கவுள்ளோம். இவ்வாறு அந்த வானொலி வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. |
வணக்கம் நண்பரே
ReplyDeleteநாங்கள் http://www.aiiaiio.com/ என்ற இணையத்தளத்திலிருந்து தொடர்புகொள்கிறோம்.
உங்களது abuanu.blogspot.com தளத்தை சமீப காலமாக பார்வையிட்டு வருகிறோம். நன்றாக செய்கிறீர்கள். மேலும், உங்களுக்கு ஆக்கங்கள் தரம்வாய்ந்ததாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அத்துடன், உங்களது ஆக்கங்களை எமது தளத்தில் உங்களது பெயருடன் இணைத்துக் கொள்ள சம்மதமா என்பதை அறியவே இந்த மின்னஞ்சலை அனுப்புகிறோம். உங்களுக்கு சம்மதம் எனில் உங்களது பெயருடன் 'ஐயையோவிற்காக உங்களது பெயர்" என்ற வகையில் உங்களது ஆக்கத்தை எமது தளத்தில் பிரசுரிக்கக் கூடியதாக இருக்கும். கீழே உங்களது தளத்தின் பெயரையும் தேவையெனில் குறிப்பிடலாம்.
உங்களது நல்ல ஆக்கங்களை ஏனைய சில தளங்கள் எடுத்து அப்படியே மீள் பிரசுரம் செய்கின்றன. இதனால் உங்களுக்கான அங்கீகாரம் அற்றுப் போகிறது. இந்தப் பிரச்சினை ஏராளமான வலைப்பூ எழுத்தாளர்களுக்கு உள்ளது. எமது முயற்சியின் ஊடாக இந்தப் பிரச்சினை சிறதளவு தீர்க்கப்பட்டு உங்களுக்கான சிறிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம். எமது இந்த முயற்சியுடன் இணைந்து கொள்ள விருப்பமாயின் உங்களது பதிலை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்
இப்படிக்கு
''ஐயையோ'' நண்பர்கள்
மின்னஞ்சல் : admin@aiiaiio.com அல்லது mrads.haren@gmail.com (இரண்டுக்கும் அனுப்பலாம்)
''ஐயையோ'' நண்பர்களுக்கு.....
ReplyDeleteஎனது பதிவினையும் கவனத்தில் கொண்டு வாசித்து, அதற்கு பதிலுரை இட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களைப்போன்றவர்களின் இவ்வாறான ஊக்கமே எனது வெற்றி.
என் பதிவுகளை உங்கள் வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதில் எந்த அனுமதியும் நான் தரத் தேவையில்லை. நீங்கள் பிரசுரித்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் என் வலைப்பக்கத்தையும் அதன் கீழ் குறிப்பிடுவீர்களானால் சந்தோசமடைவேன்.
மென் மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
நன்றி.