Sunday, February 12, 2012

இந்திய சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த அமைச்சர்கள் ?

சங்பரிவாரத்தினரால் பாகிஸ்தான் கொடி ஏற்றிக் கலவரம் எற்படுத்த முயன்று மாட்டிக் கொண்ட சமாச்சாரம் பற்றி கர்நாடக சட்டப் பேரவையில் பேச்சு நடந்து கொண்டிருந்த போது மூன்று அமைச்சர்கள் சர்வ சாதாரணமாக செல்போனில் ஆபாசப்படம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்துள்ளது இன்றைய பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகவும் பரபரப்பு செய்தியாகவும் இருந்ததைப் பார்த்தோம்.

பொதுவாகவே பாராளுமன்றம்> சட்டமன்றம் போன்றவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் அதிகமானோர் ரவுடிகளாகவும்> கூத்தாடிகளாகவும்> கேளிக்கைகளில் மூழ்கித் திளைத்தவர்களாகவும் இருக்கின்றனர். 

தேசப்பற்று அறவே இல்லாத இவர்களால் அங்கு பேசப்படும் நாட்டு நலனில் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை அதனால் அவர்களை பல வேலைகளில் உறக்கமும் மேலிடத் தொடங்குகிறது.

இவர்களில் பலர் ஏற்கனவே உறங்கி வழிந்து கேமராவின் கழுகுக் கண்களில் மாட்டிக் கொண்ட சம்பவமும் ஏற்கனவே நிறைய நடந்துள்ளது அதில் தமிழ்நாட்டு ராமராஜனும் அடங்குவார்.

கூத்தாடிகளும்> ரவுடிகளும்> கேலிக்கைகளில் மூழ்கித் திளைத்தவர்களும் பாராளுமன்ற> சட்டமன்றத்தை ஆக்ரமித்துக் கொண்டதால் படித்தவர்களும்> தேசப் பற்றாளர்களும் அதிகமானோர் பாராளுமன்ற> சட்டமன்ற உறுப்பினராவதற்கு விரும்புவதில்லை.

அதனால் இவர்களே அதிகமாக செல்கின்றனர் அதனால் இவர்கள் வெளியில் செய்த ரவுடியிஷங்களையும்> ஆபாசங்கயையும் உள்ளேயும் தயக்கமின்றி செய்கின்றனர். இவர்களின் மேல்படி வெறுக்கத்தக்க செயல்களால் பலமுறை கண்ணியமிக்க பாராளுமன்ற> சட்டமன்றம் ஸ்தம்பித்திருக்கிறது. 

இவ்வாறு செய்பவர்கள் மீண்டும் செய்யமலிருப்பதற்கு போதுமான தண்டனைகளும் நீதிமன்றங்களால் வழங்கப்படுவதில்லை இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தில் இதற்கு இடமில்லாமல் இல்லை இருக்கவே செய்கிறது. 

ஆனால் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் லஞ்சத்தின் அடிப்படையில் நீதிபதி பதவியை பெற்றுக் கொண்ட சில நீதிபதிகள் மேல்படி குற்றமிழைக்கும் பண முதலைகளிடமிருந்து லஞ்சத்தை கத்தை> கத்தையாக கறந்;து கொண்டு தண்டனை பெறாமல் வெளியேற்றி விடுகின்றனர்.

இதற்கு முன்; 2008 ஆகஸ்டு 26ம் தேதி மும்பை புனேயில் தனியார் பங்களா ஒன்றில் நடத்தப்பட்ட மது விருந்து ஒன்றில் ஆபாச நடனத்துடன் கூடவே ஆபாசப் படமும் காட்டப்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்போரின் உறக்கம் கலைந்து பொதுமக்களால் போலிஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேல்படி ஆபாசப் பிரியர்கள் பிடிபட்ட தகவலை அறிந்திருக்கிறோம்.  

பிடிபட்டதில் அதினமானோர் சுங்கத்துறை அதிகாரிகள் ஆவர் அவர்களிடம் போலீஸார் எதாவது பெரும் தொகையை வாங்கிக் கொண்டு விட்டிருந்திருப்பார்கள் ஆனால் அங்கே பப்ளிக் கூடிவிட்டதால் வேறு வழியில்லாமல் இந்திய தண்டளைச் சட்டமமாகிய ஆபாசப் படம் பார்த்தல் - பார்க்கத் தூண்டுதல் பிரிவு 292ன் படி வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மேல்படி ஆபாசப் பிரியர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர். 

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.தஹிலரமணி அது பொது இடம் அல்ல தனியாருக்கு சொந்தமான பங்களா என்பதுடன் அது உள்ளரங்கு நிகழ்ச்சி என்பதால் இது பொதுமக்களை பாதித்ததாக கருதப் படாது அதனால் இது குற்றமாகாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வாசித்து வழக்கை ரத்து செய்து விட்டார்.

அவர்கள் அந்த பங்களாவுக்குள் விடிய விடிய அடித்த ரகளை அக்கம் பக்கத்தில் வசிப்போரின் காது சவ்வுகளை கிழித்து விட்டதாக புகாரளித்தே அங்கு போலீஸ் வரவழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று நாட்டின் முதுகெலும்பாகிய சட்டப்பேரவையில் இத்தளை கீழ்தரமாக நடந்து கொண்ட மேல்படி மூன்று அமைச்சர்களையும் எதிர்கட்சி உறுப்பினர்கள் குறைந்த பட்சம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லிக் கூச்சலிட்டும் எங்கள் செல்லுக்கு திடீரென வந்த எஸ்.எம்.எஸ் ஐ ஓப்பன் செய்து செய்து பார்த்ததில் வெளிநாட்டு ரேப் சீனை பார்த்துக் கொண்டிருந்தோம் அதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றுக் கூறிப் பிடிவாதமாக மறுத்து விட்டனர். (சுரண்டலில் இன்னும் அவர்கள் தங்களுடைய குறிப்பிட்ட இலக்கை அடைய வில்லை போலும் ?).

இறுதியில் ஆளும் கட்சி அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் அவர்களிடமிருந்து ராஜினாமா பெறுவது என்று முடிவெடுத்து அவர்களிடம் ராஜினாமாவை வலுக்கட்டாயமாக வாங்கி உள்னர். இது தான் கண்ணியமிக்க சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்ததற்காக அவர்களுக்கான தண்டனை (?).

இதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சர் என்பது அதிர்ச்சி தகவல் ? இதுவரை இவர் பெண்களுக்கான என்ன மாதிரியான நலத் திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தினாரோ தெரியவில்லை ?  


ப்ளாட்பாரத்தில் ஆபாச சிடி விற்கும் ஏழைகளுக்கு மட்டும் தான் மேல்படி ஆபாசப் படம் பார்த்தல் - பார்க்கத் தூண்டுதல் பிரிவு 292ன் இந்திய குற்றவியல் சட்டம் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வோம்.  

  • ஆபாசத்தை பச்சையாக அரங்கேற்றும் நட்சத்திர ஹோட்டல் காரர்களுக்கு 292ன் கீழ் தண்டனை கிடையாது.
  • ஆபாசத்தை பச்சையாக அரங்கேற்றும் சினிமாக் காரர்களுக்கும் 292ன் கீழ் தண்டனை கிடையாது. 
  • ஆபாசத்தை பொது மக்கள் காணும் விதமாக பொதுமக்களை வழிகெடுக்கும் விதமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு எடுத்து நடத்தும் அரசியல் வாதிகளுக்கும்> அரசு அதிகாரிகளுக்கும் 292ன் கீழ் தண்டனை கிடையாது.
  • ஆபாசத்தை பச்சையாக கடற்கரை ஓரங்களிலும்> கடற்கரை சாலைகளின் நவீன பங்களாக்களில் நடத்தும் வி.ஐ.பி வீட்டுப் பிள்ளைகளுக்கும் 292ன் கீழ் தண்டனை கிடையாது.

தண்டனை வழங்க இந்திய குற்றவியல் சட்டத்தில் இடமிருந்தும் நீதிபதிகள் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிக்க விட்டு விடுகின்றனர்.     

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் பக்கம் இவர்கள் திரும்பாதவரை இந்தியாவின் சன(?)நாயகம் படுகுழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போட்டு மூடுவதை யாராலும் தடுக்கவே முடியாது.   

தகவல்: ஆதிரை பாரூக்.( மின்னஞ்சலூடாக..)

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.