“சைபர் யுத்தம் என்பது என்னை
பொருத்தவரையில் கராஜில் நிற்கும் பெராரி கார் போன்றது. அது சும்மா
நிற்கையில் அமைதியானது. களத்தில் வந்து விட்டால் அதன் வேகத்திற்கு இணை
கிடையாது. அது போலத்தான் சைபர் யுத்தம் என்பது.
அமெரிக்காவை சீண்டிவிட்டுள்ளது
ஈரான். இனி நாம் யார் என்பதை சைபர் யுத்தம் மூலமும் அவர்களிற்கு
காட்டுவோம்”. Leon Peneta (இயக்குனர் பென்டகன், முன்னாள் இயக்குனர்
சீ.ஐ.ஏ.)
அமெரிக்காவின் உளவு விமானம் Drone .
இது ஆளில்லா தாக்குதல் மற்றும் உளவு விமானம். இது கடத்தப்பட்டு ஈரானில்
தரையிறக்கப்பட்டது. இங்கு விமானக்கடத்தல்காரர்கள் யாரும் இல்லாமலே விமானம்
கடத்தப்பட்டுள்ளது. இது நாம் தெரிந்த அதிசயித்த செய்தி.
யுத்தங்களில் அமெரிக்காவின்
தாக்குதல் பலத்தில் பெரும் பங்கு வகிப்பது வான்படை. எதிரியின் தாக்குதல்
பலத்தில் பாதியை வான்படை அழித்துவிடும். மிகுதியை தரைப்படையினர்
பார்த்துக்கொள்வர். இது வரை கால அமெரிக்க ஆக்கிரமிப்பு தாக்குதல்கள்
அனைத்திலும் இவ்வாறே நிகழ்ந்துள்ளது.
எதிர்கால யுத்தங்களில் அமெரிக்க
வான்படை தங்கியிருக்கும் நவீன விமானங்கள் 3 வகை சார்ந்தவை. Stelth, Delta,
Drone. இதில் Drone என்பது முதல் கட்ட வேலையை செய்வது. துல்லியமான உளவு
தகவல்கள், முக்கிய இலக்குகள் மீது நெருங்கித் தாக்குதல் போன்ற அதி
முக்கியமான வேலைகளை செய்வது. அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ.யின்
இயக்கத்திற்கு பெரும் பங்கு வகிப்பது. கப்டன் அமெரிக்காவின் நம்பிக்கை
நச்சத்திரம் தான் ட்ரோன்.
கடந்த மாத நடுப்பகுதியில்
அமெரிக்காவின் பல நிலைகள் வைரஸ் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டன. Skipot
என்ற பெயரில் உள்நுழைந்த இந்த வைரஸ்கள் அமெரிக்காவின் பிரதம வைரஸ் தடுப்பான
Symentec Anti Virus மென்பொருளின் ஊடாக கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
Symentec நிறுவன தலைவர் இது சாதாரண ட்ரோஜன் வகையினது என அறிவித்தார்.
அமெரிக்காவின் விமானந்தாக்கி கப்பல், கடற்படைத்தளம், பென்டகன், விமானத்தளம்
போன்றவற்றில் இதன் தாக்கம் உணரப்பட்டது.
இந்த
ட்ரோஜன் வைரஸை அழித்தபோதும் இதனுடன் இணைக்கப்பட்ட உபரி வைரஸ்
அமெரிக்காவின் பல படைத்துறை உயர்நிலை அதிகாரிகளின் கணனிகளில் பரவியது.
குறிப்பாக Secret Drone Program நிபுணர்களின் கணனிகளில். இதுவே DoD
(Defence of Drone) ட்ரோன் விமான தரையிறக்கத்தில் முக்கிய பங்கினை
வகித்துள்ளது. உஸாமா பின் லாதின் மீதான தாக்குதல் என அமெரிக்கா
கூறிக்கொள்ளும் அபோதாபாத் தாக்குதலின் போது இந்த விமானமே முற்று முழுதான
பங்களிப்பை வழங்கியது. இதன் வழிநடத்தலின் பேரிலேயே அந்த ஒப்பரேஷன் செய்து
முடிக்கப்பட்டது.
அமெரிக்க அனுகுண்டுகள், ஏவுகணைகள்
போன்றவற்றின் கட்டுப்பாட்டு கணனிகளில் ஈரான் என்ன விதமான வில்லங்கங்களை
விதைத்துள்ளது என்பதில் முடியை பிய்த்துக்கொண்டிருக்கின்றனர் அமெரிக்க
கணனிவியல் நிபுணர்கள். இப்போது ஈரானை தாக்க போய் பாரிய இழப்புக்களை
சந்திக்க வேண்டுமோ எனும் அச்சத்தில் இருக்கிறது அமெரிக்கா.
இப்போது அமெரிக்கா வெட்கத்திலும்
வெறுப்பிலும் உள்ளது. கோலியாத்தை வென்ற தாவுத் போல அமெரிக்கா தனது கணனி
தொடர்பான மெகா டிபென்ஸ் ஸிஸ்டம் பற்றிய நம்பிக்கையில் இருக்கையில் சாதாரண
ஒரு வைரஸின் ஊடாக அமெரிக்காவையே தடுமாற வைத்தது அமெரிக்காவை பாரிய கவலைகளை
நோக்கி முன்தள்ளியுள்ளது.
பெங்களுர், ஹைதராபாத் போன்ற இந்திய
நகரங்களில் இருந்து 460 இற்கும் மேற்பட்ட கணனியியல் நிபுணர்கள் ஈரானில்
முக்கிய நிலைகளில் சேவை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் டுபாய், பஹ்ரைன்
போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக அந்த
நாடுகளிற்கு உயர் தொழில் பெற்று சென்றவர்கள். ஓரிரு மாதங்களுல் இவர்களில்
பலரை ஈரானிற்குள் அதிகபட்ச சம்பளத்திற்கு கடத்தியுள்ளது ஈரான். கூடவே
பாகிஸ்தானிலிருந்து 200இற்கும் மேற்பட்ட கணனிவியல் நிபுணர்கள் இதே பாணியில்
ஈரானினுல் உள்வாங்கப்பட்டுள்னர். இது நடந்தது 3 வருடங்களிற்கு முன்பு.
இதன் பின்னரே சைபர் யுத்தத்தில் ஈரான் களமிறங்கியுள்ளது. அதாவது
ஆத்திரமுறும் அமெரிக்கா தனது சைபர் தாக்குதலை ஈரான் மீது நடாத்தினால் என்ன
செய்வது என்பதற்கான சில மாற்றுத்திட்டங்களை வகுத்த பின்பு என்பது
குரிப்பிடதக்கது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.