முற்காலங்களில்
கண் பார்வையில் குறைபாடுடையர்கள் தான்.
அதை ஈடு செய்வதற்காக மூக்குக்கண்ணாடிகளை அணிந்தார்கள். காலப்போக்கில் நாகரிகம்
என்று கூறிக்கொண்டு அழகுக்காகவும் அணிந்தார்கள். ஆனால் தொழில்நுட்பவியலாளர்கள்
ஒருபடி மேலே சென்று இந்த மூக்குக்கண்ணாடிகளையும் மின் சாதனமாக
மாற்றிவிட்டார்கள். இதன் அடிப்படையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
கண்ணாடியை அணிந்தவாறு பார்க்கும் காட்சிகள், பொருட்கள் என்பனவற்றை அதில் பொருத்தப்பட்டுள்ள உயர்
திறன் கொண்ட வீடியோ கேமரா மூலம் 1080 பிக்சல்களில்
பதிவு செய்ய முடியும்.
மேலும், அதில் பொருத்தப்பட்டுள்ள 8 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்கக்கூடியதாக காணப்படுவதுடன் 44.1 kHz அதிர்வெண்ணுடன் இயங்கக்கூடிய மைக்ரோபோனும் காணப்படுகின்றது. இன்மூலம் 720PT பிக்சல் அல்லது 1080PT பிக்சலில் பதிவு செய்யப்படும் வீடியோவானது செக்கன்டுக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் பதிவாகுவதுடன் 720PT பிக்சலில் பதிவு செய்யும் போது செக்கன்டுக்கு 60PT பிரேம்கள் என்று மாற்றக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.