Thursday, March 15, 2012

உங்களுக்கென்று ஒரு இலவச Hard Disk.


இணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த தொடர்பாடல் ஊடகமாக காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக (hard disk) பயன்படுத்த முடியும்.இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25GB வரை அதிகரிக்க முடியும்.இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும்.இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:
1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/ Gmail Drive என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.PT
2. தற்போது உங்களது my computer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம் காணப்படும். அதில் Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை தெரிவு செய்யவும்..
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும்.
4. இப்போது குறித்த Hard disk இல் நீங்கள் விரும்பியவற்றை சேமித்து வைப்பதோடு உலகின் எந்த மூலையிலிருந்தும் பாவித்தும் கொள்ளலாம்.

1 comment:

  1. மிகவும் பயனுள்ள பதிவு.
    உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க... http://www.hotlinksin.com ல் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.