கம்பியில்லா இன்டர்நெட் (Wi-Fi)
சேவையை லேப்டாப்பில் பயன்படுத்தும் ஆண்களுக்கு விந்தணுவின் வீரியம் குறையும் என
ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழுவினர், ஆரோக்யமாக உள்ள 29 பேரிடமிருந்து விந்தணுவை சேகரித்து அதை 2 புட்டிகளில் அடைத்தனர். இதில் ஒரு புட்டியை,Wi-Fi இன்டர்நெட் இணைப்புடன் கூடிய லேப்டாப் அருகில் 4 மணி நேரம் வைத்தனர். மற்றொரு புட்டியை வேறு இடத்தில் வைத்தனர். எனினும், இவ்விரு புட்டிகளும் ஒரே சீரான வெப்ப நிலையில் வைக்கப்பட்டது.பின்னர், இரு புட்டிகளில் இருந்த விந்தணுவையும் பரிசோதித்தனர். லேப்டாப் அருகில் வைக்கப்பட்ட புட்டியில் இருந்த விந்தணுவில் 25% செயல்திறன் (மொட்டிலிட்டி) குறைவாகவும், 9% டிஎன்ஏ பாதிப்பும் இருந்தது தெரியவந்தது. அதேநேரம் மற்றொரு புட்டியில் இருந்த விந்தணுவில் 14% செயல்திறன் குறைவாகவும், 3% மட்டும் டிஎன்ஏ பாதிப்புடனும் இருந்தது. லேப்டாப்பிலிருந்து வெளியாகும் வெப்பத்தால் இந்த பாதிப்பு ஏற்படாது. எனினும் Wi-Fi பயன்படுத்துவதால் ஏற்படும் மின் காந்த அதிர்வுகளுக்கும், விந்தணு பாதிக்கப்படுவதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.