ஜப்பான் நாட்டில் 100 வயதை கடந்தவர்கள் 50
ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின், ஒசாகா நகரில் வாழும் மிசாகா
ஒகாவா 114 உலகிலேயே அதிக வயதான பெண் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1898ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி
பிறந்த மிசாகா, ஒசாகா நகரின் மருத்துவனை ஒன்றின் பராமரிப்பில் உள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் 115வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மிசாகா,
உடல்நலத்தில் காட்டிய அக்கறையே தனக்கு நீண்ட ஆயுளை தந்துள்ளதாக
தெரிவிக்கிறார்.
ஜப்பானை சேர்ந்த 115 வயது ஜிரோமோன் கிமுரா , உலகிலேயே அதிக வயதான தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.