Friday, March 15, 2013

ஒற்றை விரலில் உலகை திரும்பிப் பார்க்க வைத்த மனிதர்-வீடியோ

மும்மொழி பேசும் கிளி!

பிரிட்டனில் கிளியொன்று ஆங்கிலம் உருது அராபி ஆகிய மொழிகளை பேசி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இஷான் மஹமூத் என்பவர் வளர்த்து வந்த 'ரொகேட்' என்று அழைக்கப்படும் ஆண் கிளியே இவ்வாறு பல மொழிகளை பேசும் திறமைமிக்க பறவையாக இருந்து வருகின்றது.

இக்கிளியானது 'ஹலோ, அவ் ஆர் யூ', 'ஆர்க் யான்'  'தே ஆர் இயர்' போன்ற வார்த்தைகளை பேசுவதாக அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ரொகேர்ட்  என்ற இக்கிளியானது எப்போதும் வரவேற்பரையில்தான் இருக்கும். எப்போதும் எம்மை சுற்றியே காணப்படும். அதனால், அது வெவ்வேறான மொழிகளை கற்றுகொண்டது. அது அதிகமான வார்த்தைகளை கற்றுகொண்டது' என இது தொடர்பில் அக்கிளியின் உரிமையாளரான இஷான் மஹமூட் தெரிவித்துள்ளார்.

உருது மற்றும் ஆங்கில மொழிகளை அதற்கு கற்றுகொடுக்க நாங்கள் முயற்சிக்கின்றோம். அவ்வாறு கற்றுகொடுத்தால் அதனை எமது நிறுவனத்திற்கும் அழைத்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஷானுடைய தந்தை டாரிக் இந்த கிளியை பாகிஸ்தானில் வளர்த்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே அதனை பிரிட்டனுக்கு அழைத்து வந்துள்ளார்;. 'ஹலோ' , 'ஆர் யூ ஓல்ரைட்', 'பாய்'  ஆகிய ஆங்கில வார்த்தைகளையே ரொகேட் முதலில் பேசியுள்ளது. இதேவேளை, வீட்டில் உள்ள நாய் பூனையை போன்றும் இந்த ரொகேட் பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கின்னஸில் இடம்பிடித்த உலகின் வயதான பாட்டி!

 ஜப்பான் நாட்டில் 100 வயதை கடந்தவர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின், ஒசாகா நகரில் வாழும் மிசாகா ஒகாவா 114 உலகிலேயே அதிக வயதான பெண் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1898ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி பிறந்த மிசாகா, ஒசாகா நகரின் மருத்துவனை ஒன்றின் பராமரிப்பில் உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் 115வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மிசாகா, உடல்நலத்தில் காட்டிய அக்கறையே தனக்கு நீண்ட ஆயுளை தந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

ஜப்பானை சேர்ந்த 115 வயது ஜிரோமோன் கிமுரா , உலகிலேயே அதிக வயதான தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.




Saturday, March 9, 2013

உலகின் மிகச் சிறிய ஆசிரியர்?

உலகின் மிகச் சிறிய ஆசிரியர் என 3 அடி உயரம் நிறைந்த அசாத் சிங் கருதப்படுகிறார்.

இந்தியா, ஹரியான மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் அசாத் கணினித்துறையில் கல்வி கற்பித்து வருகின்றார்.

அசாத்திற்கு தற்போது 22 வயது ஆனாலும்கூட 13 இறாத்தல் நிறையுடவராகவும் 7 வயதினருக்குரிய ஆடையை அணிபவராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் 5 வயதாக காணப்படும்போது ஹார்மோன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது வளரச்சி தடைப்பட்டுள்ளது. குடும்பத்தின் வறுமைநிலைக்காரணமாக இவருக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது.

சர்க்கஸ் குழுவொன்றினால் தான் சிறுவயதிலே கடத்தப்பட்டதாக இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணினித்துறை கற்பித்தல் ஊடாக இவர் தற்போது மாதம் ஒன்றுக்கு 10,000 இந்தியன் ரூபாய்களை வருவயாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவர்கள் இவரை 'லிட்ல் ஸ்டார்' என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

'நான் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் எப்போதும் எதை விரும்பினேனோ தற்போது அதை அடைந்துள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசாத் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாயார் பார்வதி தெரிவித்துள்ளார்.