Friday, September 24, 2010

உலகிலேயே மிகப்பெரிய மூக்கு.

 உலகிலேயே மிகப்பெரிய மூக்குக்கு சொந்தக்காரராக பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் வசிக்கும் Faizan Agha அவர்கள் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இவரின் மூக்கின் அளவு 12.19 Cm(4.8 அங்குலங்கள்) ஆகும்.
இதற்கு முன்பு  ஜூலை 6,2007 அன்று உலகிலேயே மிகப்பெரிய மூக்காக சாதனப்புத்தகத்தில் இடம்பிடித்த துருக்கியின் Artvin நகரில் வசிக்கும் Mehmet Ozyurek என்பவரின் 8.8Cm(3.5 அங்குலங்கள்) நீளமான மூக்கின் சாதனையை முறியடித்து இச்சாதனையைப் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




புத்திசாலிக்குழந்தை.

அதிக விலைக்கு சுங்கான் பெட்டி விற்பனை.

பதினேழாம் நூற்றாண்டில் இலங்கையில் யானைதந்தத்தில் தயாரிக்கப்பட்ட மிகுந்த சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய புகைபிடிப்பதற்கான சுங்கான் பெட்டி ஒன்று பிரிட்டனில் பெரும் விலைக்கு ஏலம் போயுள்ளது.
தந்தத்திலான இந்த சிங்கள, இரு குழல் சுங்கான் பெட்டி 80,300 அமெரிக்க டாலர்களுக்கு விலைபோயுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான விலையாகும். 
கிறிஸ்டி என்னும் ஏல நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட இந்த சுங்கான் பெட்டியை வாங்கியவரின் பெயர் ரகசியமாக பேணப்படுகிறது.
50 ஆண்டுகளாக பல்வேறு வகையான சுங்கான்களை சேகரித்து வந்த Trevor Barton என்பவரது பொக்கிஷங்களில் இருந்தே இந்த சுங்கான் பெட்டி கிடைந்திருந்தது.
வித்தியாசமான புகைபிடிப்பு கருவிகள் என்கிற பட்டியலின் கீழ் இந்த சுங்கான் பெட்டி விற்பனைக்கு வந்தது.
இதுபோன்ற சுங்கான் பெட்டிகள் நான்கு மட்டுமே உலகில் இருப்பதாக கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்திலும், மற்ற இரண்டு நெதர்லாந்தில் இருக்கும் டி மொரியான் அருங்காட்சியகத்திலும் இருக்கின்றன. 
நன்றி.BBC

மண் ஓவியங்கள்.

25 வயதான உக்ரைன்  நாட்டைச்சேர்ந்த Kseniya Simonova (April 22,1985) என்பவர் தனது கற்பனைகளை மண்ணைக் கொண்டு  ஓவியங்களாக வரைந்து, பார்ப்போரை அசத்தி வருகிறார்.இவரது மண் ஓவியங்கள் பிரசித்தி பெற்றவை.
 இவர் “2009 Ukraine’s Got Talent.” எனும் விருதினை தான் வரைந்த மண் ஓவியங்களுக்கு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவரது மண் ஓவியங்கள் வீடியோ கீழே.

 அவரது மண் ஓவியங்கள் படங்கள்.










Thursday, September 23, 2010

எச்சரிக்கை!!! - இரகசிய கமேராக்கள்

இன்று பரவலாக பல்வேறு தேவைகளின் நிமித்தம் பல் வேறுபட்ட இடங்களுக்கும்,தளங்களுக்கும் நாம் செல்ல வேண்டியுள்ளது.
அதிலும்  குறிப்பாக, பெண்கள் தங்களின் ஆடைகளை தெரிவு செய்வதற்காக ஆடையகங்களுக்கு செல்கின்றோம். அங்கே  நாம் விரும்பும் ,தெரிவு செய்யும் ஆடைகளை அணிந்து பார்க்க அங்குள்ள இரகசிய அறைகளை உபயோகிக்கின்றோம்.தூர பிரயாணங்களை மேற்கொள்ளும் போது இராப் பொழுதுகளை  கழித்துக்கொள்ள விடுதிகளையும்,தமது அவசரத்தேவைகளை நிறைவேற்றிகொள்ள பொது மலசல கூடங்களையும்  உபயோகிக்ன்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களிளெல்லாம் பெண்கள், அதிலும் குறிப்பாக இளம் வயதினர் மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.
ஏனென்றால்,இன்றைய தொழிநுட்பம்  மனிதனுக்கு நன்மைகளை கொண்டு வந்த அதே வேளை, பல்வேறுபட்ட தீமைகளையும்,பாதிப்புக்களையும் கொண்டு வராமல் இல்லை.
அந்த  வகையில் தான், இன்றுள்ள இரகசிய காமேரா(Spy Camera) க்களை
 மறைத்து வைத்து, மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் அநாகரீகமான முறையில் படமெடுத்து இணையங்களிலும் , கைத்தொலைபேசிகளிலும் அலைய விட்டு அதனை ரசிக்க ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கின்றது.
எனவே தான், நாம் வீட்டை விட்டு வெளிச்செல்லும் போது எமது ஆடைகளை சரி பார்த்துக்கொள்வதும், மேற்குறிப்பிட இடங்களுக்கு செல்லும் போது அவதானமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இவாறான இடங்களில் பொருத்தக்கூடிய,மிக மிக இரகசியமாக படமெடுக்கூடிய இரகசியக்கமேராகளின் படங்கள் இதோ......

































இத்தகவலை முடிந்தவரை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.
நன்றி.Ofnaa-Doha (images)