Thursday, May 27, 2010

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்



சென்னையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் நட்டி சாதனை படைத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த தம்பதி சங்கரன்&அமுதா. இவர்களின் மகன் சந்தோஷ்குமார் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். சிறு வயதில் இருந்தே மலை ஏற்றத்தில் ஆர்வம் கொண்டவர். மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிளான்க், நியூசிலாந்தில் உள்ள சோ யூ, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமன்ஞாரோ ஆகிய சிகரங்களில் ஏற்கனவே ஏறியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, உலகிலேயே மிக உயரமான இந்தியாவின் எவரெஸ்ட் சிகரத்தையும் ஏறி சாதனை படைக்க திட்டமிட்டார். மார்ச் 29ம் தேதி, சென்னையில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். காத்மண்டுவில் இருந்து 30ம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை தொடங்கி, மே 23ம் தேதி சிகரத்தின் உச்சியை அடைந்தார். சிகரத்தின் உச்சியில் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் வைத்தார்.

இதன் மூலம் ‘எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்’ என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார்.

சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சந்தோஷ்குமார் இறங்கிக் கொண்டு இருக்கிறார். நாளை (28ம் தேதி) அவர் காத்மண்டு வந்துவிடுவார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

2 comments:

  1. சந்தோஷின் சாதனையில் பெருமிதம் எனக்கும் ...
    தகவலுக்கு நன்றிகள் தோழர் ...

    ReplyDelete
  2. தமிழனின் சாதனையில் நாம் எல்லோரும் சந்தோசப்படுவோமாக.மேலும் சாதனைகள் தொடர சந்தோஷுக்கு எம் வாழ்த்துக்கள்.தங்களது வருகைக்கு நன்றிகள் தோழா.வாழ்க.

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.