இலங்கையில் பரவலாக சகல பகுதிகளிலும் பரவிவரும் டெங்குக் காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் 113 பேர் பலியாகியுள்ளதாகவும், இக்காய்ச்சல் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,411 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலேயே இந்நோய்த் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு மட்டும் 2354 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக கம்பஹாவில் 2219 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 2181 பேருக்கும் இக்காய்ச்சல் வந்துள்ளது. மன்னாரில் கடந்த வாரம் மட்டும் 45 பேருக்கு இக்காய்ச்சல் பீடித்துள்ளது. ஆனால் அங்கு இதுவரை இறப்பு எதுவும் நிகவில்லை என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதத்தில் நாட்டில் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஜூன் மாதத்தில் டெங்கின் தாக்கம் 1943 பேருக்கு ஏற்பட்டது. ஆனால் கடந்த ஜனவரியில் 4672 ஆக இருந்த இந்த எண்ணிக்கை மே மாதம் வரை குறைந்துசென்று 1888 ஐ அடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இரத்தினபுரியில் 1253 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1048 பேருக்கும் இக்காய்ச்சல் பீடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Thanks To.......Athirvu
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.