Sunday, June 27, 2010

கூகுள் உட்பட 9 இணையங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை உத்தரவு

http://www.virakesari.lk/news/admin/images/google_logo..jpg

  கூகுள், ஹொட்மெயில், யாஹூ உள்ளிட்ட 9 இணையதளங்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
லாகூர் உயர்நீதிமன்றத்தின் பகவல்பூர் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், கூகுள், யாஹு, எம்.எஸ்.என், ஹொட்மெயில், யூடியூப், பிங், அமேசான் உள்ளிட்ட 9 இணையதளங்களும் மத விரோத , மத துவேஷ செய்திகளை வெளியிட்டுள்ளதால் இவற்றை தடை செய்ய பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முகம்மது சித்தீக் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
அதேசமயம், இந்த இணையத்தளங்கள் மீது வழக்கு ஏதேனும் தொடரப்படுமா என்பது குறித்து பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
Thanks To....Veerakesari

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.