Tuesday, June 15, 2010

பொன்மொழி முத்துக்கள்

1.சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோசம் சின்ன விசயமில்லை.
2.செலவுக்கு மேல் வரும்படி உள்ளவன் செல்வன்.வரவுக்கு மேல் செலவழிப்பவன் ஏழை.
3.போனால் வராதது ஒன்று தான். அதுதான் காலம்.
4.மனைவி இல்லாதவன் அரை மனிதன்.
5. ஆண்களை விடப் பெண்களுக்கு பசி இரு மடங்கு. புத்தி நான்கு மடங்கு. ஆனால், ஆசைகளோ எட்டு மடங்கு.(பெண்கள் வருந்தாதீர்கள்)
6.அழகுக்கு ஆற்றல் அதிகம்.ஆயினும்,அதைவிட ஆற்றலுடையது பணமே!
7.உள்ளத்தில் அன்பு இருந்தால் போதாது, அது செயலில் வெளிப்பட வேண்டும்.
8.பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால் தான், எல்லா இன்னல்களும் வருகின்றன.
9. எழுதப்படும் சொல்லை விட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது.
10.நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
11.பரிசுத்த இதயத்தைப்பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி.
12 .பொறுமை சாலிக்கு கோபம் வரும் போது எச்சரிக்கையுடன் விலகி இருப்பது நல்லது.
13 .துன்பங்கள் நிலையானவை அல்ல. அவை ஆற்றில் ஓடும் தண்ணீரைப் போல ஓடி விடும்.
14 .வல்லைமையற்ற நீதி ஆற்றலற்றது.நீதியற்ற வல்லமை கொடுங்கோண்மை.
15 .எந்தவொரு முட்டாளும் பணம் ஈட்ட முடியும்.ஆனால், அறிவாளியால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
நன்றி,நிடூர்.

4 comments:

  1. 13 .துன்பங்கள் நிலையானவை அல்ல. அவை ஆற்றில் ஓடும் தண்ணீரைப் போல ஓடி விடும்

    தன்னம்பிக்கையளிக்கும் வரிகள்!!

    ReplyDelete
  2. அத்தனை விடயமும் மிக தெளிவாத்தான் இருக்கு முழுமையா பின்பற்றத்தான் கடினமா இருக்கு.
    பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    நண்பரே... Word verification இத தூக்குங்க...
    ரொம்ப படுத்துது.

    ReplyDelete
  3. தன்னம்பிக்கையே வாழ்வின் வெற்றி. துன்பங்கள் வருகையில் நிமிர்ந்து நிற்ப்போம். தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. முடிந்தவரை பின்பற்ற முயற்சிப்போம். தங்களது பாராட்டுக்களுக்கும், வருகைக்கும் நன்றி.
    நீங்கள் குறிப்பிட்ட Word Verification எது என்பது தெளிவில்லை.மீண்டுமொரு முறை தெளிவாக குறிப்பிட முடியுமா?

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.