Google முதற்றே உலகு
கேட்டது கொடுக்கும் மணிமேகலையின் அட்சயபாத்திரத்தைப் போன்றதுதான் இந்த Google-ம். எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து தகவல்களையும் கேட்ட நேரத்தில், கேட்ட மாத்திரத்தில், கேட்டவிதத்தில் அள்ளித்தருவது Google-தான். வெறும் தேடுபொறியாக அறிமுகமான Google இப்பொழுது அதனையும் தாண்டி பல சேவைகளை உயர்தரத்துடன் இலவசமாக வழங்கி வருகிறது. அவற்றுள் பலவற்றைப் பற்றி அறிமுகமிருந்தாலும், சில இன்னும் பலரால் அறியப்படாமலேயே இருப்பதினால் அவற்றைப்பற்றியதான ஒரு சிறு அறிமுகம்.Google Docs
Microsoft நிறுவனத்திற்கு இயங்குதளத்தைக்காட்டிலும் அதிக வருமானத்தை ஈட்டித்தருவது MS Office தான் என்றால் அது மிகையாகாது.அத்தகைய Office Application தான் இந்த Google Docs. இதில் Word, Powerpoint,Excel என அனைத்தும் உள்ளன. எந்தவொரு கோப்பையும் உடனடியாக PDF வடிவத்தில் மாற்றிக்கொள்ளலாம். MS Office நமது கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நேரடியாக இணையத்திலேயே இத்தகைய கோப்புகளை உருவாக்கலாம். இதனால் கோப்புகளை எந்த இடத்திலும் எளிதாக பெற முடிகிறது. ஒரு கோப்பினுள் பலரும் கூட ஒரே நேரத்தில் பணியாற்றவும், பயன்படுத்தவும், மாற்றவும் முடியும். மேலும் விவரங்களுக்கு www.docs.google.com
Google sites
இணையதளங்களை காசுகொடுத்து உருவாக்க வேண்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. மேலும் இணையதளங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக அறிவும் இனி தேவையில்லை.மிக எளிதாக Google sites-ல் நம் விருப்பத்திற்கு ஏற்ப இணையதளங்களை உருவாக்கலாம். வலைப்பூக்கள் கூட இலவசம் என்றாலும் அதில் நாம் கோப்புகளை பதிவேற்ற முடியாது. ஆனால், Google sites-ல் எத்தகைய கோப்புகளையும் பதிவேற்ற முடியும். பார்வையாளர்களை கட்டுப்படுத்த முடியும். அவர்களின் கருத்துக்களை/விமர்சனங்களை பெறமுடியும். ஆரம்பகட்ட பயனாளர்கள், இத்தகைய இலவச வசதியினை பயன்படுத்திகொள்வது சிறந்தது. பொதுவாக Google sites, கீழ்க்கண்டவற்றுக்கு மிகவும் உகந்தது.
- தனிப்பட்ட பயன்பாடு (Personal Use)
- திட்ட மேலாண்மை பயன்பாடு (Project Use)
- நிறுவன உள் இணையம் (Company Intranet)
- சமூக வளர்ச்சி அமைப்பு (Community Development)
Google Calendar
இன்றைய வேக உலகில், எதனையும் திட்டமிட்டு நடத்திச்சென்றாலும் கூட, தவறுகள் சில ஏற்படத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் நினைவில்கொள்வது என்பதும் காரிய சாத்தியமில்லாததும் கூட. பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று திட்டு வாங்கியது கூட உண்டு. ஆனால், Google Calendar பயன்படுத்துவதால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அனைத்து நிகழ்ச்சிகளையும் இதில் பதிவு செய்துவிட்டால் போது. உரிய நேரத்தில், SMS, Pop-up,Email என நமது வசதிக்கேற்ப தகவலை அளித்துவிடும். மேலும் விவரங்களுக்கு www.calendar.google.com
Google Picasa
நமது இனிய தருணங்களை என்றும் நினைவுபடுத்தும் அதிசயம் தான் புகைப்படங்கள். நாம் ரசித்த காட்சிகளை மீண்டும் நம்முன்னே கொணடுவரும் இத்தகைய புகைப்படங்களை பத்திரமாக சேமித்துவைக்க சுமார் 1.5 GB இடம் Google-ஆல் இலவசமாக தரப்படுகிறது. விருப்பமிருப்பின், இத்தகைய புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். என் இணையதளத்தின் இடத்தை சேமிக்க நான் பயன்படுத்துவது Google Picaso தான். கட்டுரைகளுக்கு தேவைப்படும் புகைப்படங்களை இதில் ஏற்றிவிட்டு, பின் இணைப்பை மட்டும் இணையபக்கத்தில் தந்துவிடுவதினால் ஏராளமான இடம் சேமிக்கப்படுகிறது. புகைப்படங்களை வகைவகையாக பிரித்துவைக்கவும், தேவையானபொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு http://picasaweb.google.co.in/
Thanks To.....Tamilcafe
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.