மிகப்பழங்காலத்தில் பூமியில் உலாவியதாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த எலும்புகள், முன்னர் டைனோசர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் காலத்திற்கும் சுமார் 10 மில்லியன் வருடங்களுக்கு முந்தியது எனக் கருதப்படுகின்றது.
தன்சானியாவில் உள்ள இடமொன்றிலிருந்து இந்த புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த உயிரினம் இருநூற்று நாற்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
டைனோசர் பரம்பரையின் ஆரம்பக்கட்டங்கள் குறித்து மீள ஆய்வு நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தப் புதிய கண்டுபடிப்புகள் தம்மை தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.