'வுவுசெலா' - தென்னாபிரிக்க உலக கிண்ண போட்டிகளை கலக்கும் சூப்பர் குரல்!
'ஜபுலானி' (உலகிண்ண போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட காற்பந்தின் பெயர்), Wave'n Flag (உலக கிண்ண போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட தீம் பாடல்) Zakumi (உலக கிண்ன போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட பொம்மை) இவையெல்லாம் தென்னாபிரிக்க ரசிகர் பட்டாளத்திற்கும் பெருமை சேர்க்க வந்த சூப்பர் கண்டுபிடிப்புக்கள் என்பது உங்களுக்கு தெரியும்! ஆனால் 'வுவுசெலா (Vuvuzele)' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? - உலக கிண்ண அணி வீரர்களையே வெறுப்புற வைத்திருக்கும் ஒரு கண்டுபிடிப்பு! வேறொன்றுமில்லை! வுவுசெலா என்பது 65 m நீளமான ஹோர்ன் தான்! ஆபிரிக்க மரை வகையான 'குடு' வின் தோலில்ஆரம்ப காலத்தில் செய்யப்பட்டது. இப்போது பிளாஸ்ட்டிக்கில் வந்துவிட்டது. லெபடட்டா, சிவப்பு வுவுசெலா, கறுப்பு வெள்ளை வுவுசெலா என பல வகையான ஹோர்ன்கள் உண்டு. இதன் தாயகம் பிரேசில். லத்தின் அமெரிக்க நாடுகளிலும் பிரபல்யம்!
தென்னாபிரிக்காவின் 10 பிரமாண்டமான மைதானங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கும் Fifa 2010 உலக கிண்ண போட்டிகளின் போது,
பார்வையாளர்களின் கரங்களில் ஆயிரக்கணக்கில் தவழ்கிறது இந்த வுவுசெலா.
கையில் வைத்திருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? எடுத்து ஊத ஆரம்பித்தால், நடுவரின் விசில் சத்தத்தை விட காதைபிய்க்கும்! (அடுத்த காலிறுதி போட்டிகளின் போது மைதானத்தில் வுவுசெலா சத்தம் எப்படி இருக்கும் என்பதை காதை கூர்மையாக்கி கேளுங்கள்). பிரான்ஸ் ஆரம்ப சுற்றுடன் வெளியேறியதற்கு கேப்டன் பட்ரிஸ் எவ்ரா கூறும் சூப்பர் காரணம் இந்த ஹோர்ன் சத்தம் தானாம்! சராமாரியாக திட்டுகிறார். காலில் பந்து கிடைத்ததும் காதை பிய்க்கிறதாம் இதன் சத்தம்.
ஆர்ஜெண்டீனாவின் லியோனெல் மெஸ்ஸியும் இதே புலம்பல் தான்! போட்டி நடைபெறும் போது மரடோனா, தனது வீரர்களுக்கு தொண்டை கிழிய கத்துவது வழமை! இந்த் ஹோர்ன் சத்தம் கேட்பதால், ஒன்றும் விளங்குவதில்லையாம்!
வர்ணனையாளர்கள், தொலைக்காட்சி சேவையாளர்கள், உலகளாவிய ரசிகர்கள் என அனைவரினது குரல்களும் வுவுசெலா மீது பாய்கிறது. ஆனால் வுவுசெலாவுக்கு தான் காதுகள் இல்லையே! அதன் சத்தம் ஓயவே இல்லை! ரசிகர்கள் வுவுசெலாவை வைத்து போடும் ஆட்டமும் குறையவில்லை! பிரபல்யமாகி கொண்டிருக்கும் இந்த வுவுசெலாவை வைத்து தனிப்பாட்டே உருவாக்கிவிட்டனர்
வுவுசெலாவுக்கு ஆதரவாக யூடியூப்பும் குரல் கொடுக்கிறது. புதிதாக காற்பந்து அடையாளத்துடன் ஒரு குறியீடு ஸ்கிரீனில் வலது கீழ் மூலையில் இருக்கும். கிளிக் செய்யுங்கள், வுவுசெலாவின் பீ..பீ.. சத்தம் காது கிழிய கேட்கும்!
- ஸாரா
Thanks To....4Tamilmedia
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.