Sunday, July 4, 2010

மக்கள் விருப்பைத் தீர்மானிக்கும் ஃபேஸ்புக்-டுவிட்டர்

பிரபல சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் தளங்கள் தற்காலத்தில் மக்களின் கொள்வனவு விருப்பத்தை தீர்மானிக்கும் சக்திமிக்க கருவிகளாக உள்ளன எனப் பிரபல இணையத்தள ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் தெரிவித்துள்ளது.
உலகளாவிய இணையத்தள பாவனையாளர்கள் நால்வரில் ஒருவர் மேற்கூறிய சமூக வலைப்பின்னல் தளங்களுடன் இணைந்திருப்பதாகவும் அவர்கள் சராசரியாக மாதத்திற்கு 6 மணி நேரம் அவற்றுடன் செலவிடுவதாகவம் மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வர்த்தகக் குறிகளில் சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், விக்கிபீடியா, யூ டியூப் ஆகிய தளங்களும் உள்ளடங்குவதாக மேற்படி நிறுவனம் தனது கடந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேற் கூரிய சமூகவலைப் பின்னல் தளங்கள் மக்களின் நுகர்வுத் தெரிவில் பாரிய செல்வாக்கு செலுத்துவதாகவும், அவை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் நீல்சன் நிறுவனத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சார்ள்ஸ் புச்வால்டர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக பொருட்களை மதிப்பீடு செய்வது மக்களிடையே மிகவும் நம்பிக்கைக்குரிய விடயமாகத் தாம் கருதுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்படி நடைமுறையானது இலத்திரனியல் அழகுசாதனம் மற்றும் உணவுப்பொருட்கள் கொள்வனவில் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது. சமூக வலைப்பின்னல் பாவனையாளர்களில் 32 சதவீதமானோர் தங்களது அலுவலகங்களிருந்தும், 31 சதவீதமானோர் தங்கள் படுக்கை அறைகளிருந்தும் வருகை தருவதாக மேற்படி ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வலைப்பின்னல், வலைதளங்கள் வணிக நடவடிக்கைகளில் பாரிய செல்வாக்கு செலுத்துவதுடன் இந்த மாற்றங்களுக்கு இசைவாகவும் அவை செயற்படுகின்றன என்பது புலனாகிறது.Thanks To.....Virakesari.
 

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.