இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனையை ஈட்டியுள்ளார். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
அவர் இந்த சாதனையை பெறுவதற்காக சற்று முன்னர் 800 வது விக்கெட்டாக இந்திய வீரர் பி.பி.ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது அவர் விளையாடுகின்ற 133 வது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை பற்றி ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காலியில் நடைபெறும் இலங்கை-இந்தியா வீரர்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியின் 5வது நாளான இன்று முரளிதரன் பெற்றுள்ள சாதனை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும். அதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளிதரனுக்கு இப்போட்டியில் வெற்றி பெற்று அதை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதன்பிரகாரம் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி தொடங்கிய போட்டியின் 2ம் நாள் மழை காரணமாக விளையாட்டு நடைபெறாத போதிலும் 3ம் நாள் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520-8 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இறுதிநாளான இன்று சற்றுமுன்னர் 338 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. சற்று முன்னர் காலியில் நடைபெற்றுவந்த இலங்கை இந்திய டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று ஓய்வுபெறும் முரளிதரனுக்கு பரிசுப்பொருளாக இந்த வெற்றியை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கி முரளியின் மகத்தான சாதனையை பாராட்டினார். போட்டி முடிந்த பின்னர் இன்று மாலை அவருக்கு மாபெரும் விழா காலியில் எடுக்கப்படுகின்றது. முரளிதரன் இது வரை 132 டெஸ்ட் போட்டிகளை ஆடி உள்ளார். அதே போல் 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெற்றுகளையும் வீழ்த்தி உள்ளார். முரளிதரன் இன்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. | |
Thursday, July 22, 2010
Congratulatios to Murali- 800 Test wickets World Record
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.