தென் கொரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 7000 வருடங்கள் தொன்மையான தேவதாரு மரத்தினாலான படகோட்டும் துடுப்பொன்றை கண்டு பிடித்துள்ளனர். சிதைவடையாமல் நல்ல நிலையிலிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, கிமே தேசிய அரும்பொருள்காட்சியகம் (Gimhae National Museum ) விடுத்துள்ள செய்தியில், சியோலுக்கு (Seoul ) தென் கிழக்கு பக்கமாக 240Km (140Miles ) தொலைவில் சாங்யாங்(Changnyeong ) பிரதேசத்திலுள்ள சேற்று நிலப்பகுதியில் இந்த அரிய துடுப்பு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அரும்பொருள்காட்சியகத்தின் ஆராச்சியாளர் யூன் ஒன்-ஷிக்(Yoon On-Shik ) AFP செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், "இது தென் கொரியாவில் மட்டுமல்ல உலகிலேயே அரிய கண்டு பிடிப்பாகும்" என்றார்.
2005 ல் சீனாவின் Zhejiang மாகாணத்தில் சீனாவின் கலையம்சங்களுடன் கண்டு பிடிக்கப்பட்ட சுமார் 8000 வருடங்கள் பழமையானதென கருதப்படும் உலகின் மிகவும் தொன்மையான படகுடன் இது சம்பந்தப்படுகிறதா என ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், சேற்றில் புதைந்து காணப்பட்டமையினால், புறத்தாக்கங்களிளிலிருந்து அதன் முழுமைத்தன்மை கெடாமல் பாதுகா க்கப்படுள்ளதுடன், அதன் முழு நீளம் 1.81M (அண்ணளவாக 6 அடி)ஆகும். என்றும் தெரிவித்தார்.
இதனுடன் ஒத்ததான 6000 வருடங்கள் தொன்மையான தென நம்பப்படும் துடுப்பொன்றை ஜப்பானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1999 ல் ஜப்பானின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கண்டெடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதனூடாக கொரிய குடாவிற்க்கும் ஜப்பானுக்குமிடையிலான பண்டைய கால வர்த்தக தொடர்புகள் நன்கு புலப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Thanks To Yahoo News
More Details Click Here.....
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.