பேர்ள் தீவு (Pearl Island)
இது "வளைகுடாவின் முத்து" என வர்ணிக்கப்படுகிறது.சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் (QR 9.1 Billion) செலவில் கத்தார்,தோஹாவின் மேற்கு வளைகுடா கடற்கரையில் செயற்கையாக இது அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 988 ஏக்கர்(4 மில்லியன் சதுரப்பரப்பு) பரப்புக்கொண்ட இந்நிலப்பகுதியை இரு மருங்கிலும் ஈச்சை மாரங்களாலான 4 பெரும் வீதிகள் நிலப்பரப்புடன் தொடர்புபடுத்துகிறது.
எதிர்வரும் காலங்களில் கத்தாரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 20Km (12.4 Miles) தொலைவில் 40Km (24.9Miles) அளவில் இத்தீவுகளானது விஷ்தரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈச்சை மரத்தீவுகள்
ஈச்சை மர வடிவிலான 3 தீவுகள் இதில் உள்ளடங்குகின்றன.
இத்தீவில் 500 தொடர் மாடி வீடுகள்,2000 குடியிருப்பு மனைகள்,25 உணவகங்கள், 200 ஆடம்பர கடைகள் அமைகின்றன.
மேலும், மேலதிகமாக 125Km இதனுடன் இணைத்து இத்தீவுகள் விஷ்தரிக்கப்படவுள்ளது.
உலகப்படத்தீவுகள்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துபாய் கடற்கரையில் உலகப்பட வடிவில் சுமார் 300 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கி இந்த செயற்கை தீவுகள் அமையவிருக்கின்றது.
இத்தீவுக் கூட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனியார் குடியிருப்பு மனைகள்,பங்களா வீடுகள்,பொழுது போக்கு இடங்கள் போன்றன அமையவிருக்கின்றன.
ஒவ்வொரு தீவுகளும் 250-900 ஆயிரம் சதுர அடி அளவுகளைக் கொண்டுள்ளதுடன் 50 தொடக்கம் 100 மீற்றர் தூர நீர் இடைவெளியில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.
வட கடல் துலிப் தீவுகள்.
கலைஞனின் எண்ணங்களைப் பிரதிபலிப்பனவையாக நெதர்லாந்தின் துலிப் தீவுகள் அமைந்துள்ளன.இன்று பெருகி வரும் உலக சனத்தொகை பரம்பலின் போது ஏற்படும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உலகத்தலைவர்கள் மேற்கொண்டு வரும் ஒரு திட்டமாக இதனைக் கொள்ளலாம்.
ரஷ்யக் குடியரசுத் தீவுகள்.
ரஷ்யாவின் சோச்சி (Sochi) கடற்கரையில் சுமார் 350 ஹெக்டர் நிலப்பரப்பில் இந்த செயற்கைத்தீவு அமைக்கப்படவுள்ளது.
சுமார் 6.2 பில்லியன் டொலர்(4.4 Billion Euros ) செலவில் 25,000 மக்கள் வசிக்ககூடியதாக தொடர்மாடிகளும்,குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டு எதிர்வரும் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.