வைத்திய உலகில் ஆச்சரியம்.
நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை அகற்றி முன்னர் வைத்திய நிபுணர் Nashik என்பவரால், 14,098 சிறு நீரக கற்களை அகற்றி நிகழ்த்தப்பட்ட பழைய சாதனையை முறியடித்து, மகாராஷ்டிர டாக்டர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ராவன்டாலே பாட்டீல். சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணரான இவர் இன்ஸ்டிடியூட் ஆப் யூராலஜி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவரிடம் 45 வயதுடைய தன்ராஜ் வாடிலே என்பவர் அடிவயிறு வலிப்பதாக கூறி, சிகிச்சைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏராளமான சிறு கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்ற டாக்டர் பாட்டீல் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி, தன்ராஜுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, சிறுநீரகத்தில் இருந்து மொத்தம் 1,72,155 சிறிய கற்கள் நான்கு மணி நேர சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டன. இந்த கற்கள் அனைத்தும் நோயாளியின் ஒரு சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை சாதனையாக கருதி, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய அனுப்பி வைத்தார் டாக்டர் பாட்டீல். அவரது சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். பாட்டீல் கூறுகையில், ‘கின்னஸ் சாதனை பதிவு அதிகாரிகளிடம் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.’ என்றார்.
மேலதிக தகவலுக்கு.....
http://www.themedguru.com/20101116/newsfeature/indian-doctor-removes-172-155-kidney-stones-single-patient-86141890.html
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.