தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டுபாடிக் கொண்டும், கை, கால் மற்றும் தலையை அசைத்த படி நடனமாடிய படியும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வசதியும் இதில் உள்ளது. தொடக்கத்தில் தென்கொரியாவில் உள்ள தேகு” என்ற இடத்தில் உள்ள 21 தொடக்கப்பள்ளிகளில் இந்த “ரோபோ”க்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில் சுமார் “30 ரோபோக்கள்” இது போன்று ஆங்கிலம் கற்றுத் தருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெண் ஆசிரியைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர்.
ஆங்கில பாடம் பிலிப் பைன்ஸ் ஆசிரியைகளின் குரல் டேப்பில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இது தங்களுக்கு நல்ல அனுபவமாக இருப்ப தாக ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம், குழந்தைகளும் மிகவும் அன்புடனும், ஆர்வமுடனும் ஆங்கில பாடம் கற்கின்றனர். இது போன்று தென்கொரியா முழுவதும் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி.வீரகேசரி.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.