960 முறை பரீட்சைக்கு தோற்றி சாதனை.
69 வயதுடைய (Cha-Sa-Soon) சா-ச-சூன் என்ற கொரிய பெண்மணி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனக்கு வாகன செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக (4,000,000 Won) சுமார் 3500 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார்.இவர் தோற்றிய பரீட்சைகள் அனைத்திலும் பரிதாபகரமான முறையில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இறுதியாக, இவரது அயராத முயற்சியின் காரணமாக,கடந்த நவம்பர் 4, 2009ல் நடைபெற்ற பரீட்சையில் 960 வது முறையாக தோற்றி, 100 புள்ளிகளுக்கு 60 புள்ளிகளைப்பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்து, தனக்குரிய வாகன ஓட்டுவதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
தான் தேர்ச்சி பெற்ற சந்தோஷத்தில் Yonhap செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த (Cha-Sa-Soon), தனக்கென ஒரு காரை சொந்தமாக வாங்கி தனது பிள்ளைகளின்வீடுகளுக்கு செல்லவும், தனது மரக்கறி வியாபாரத்தை விரிவுபடுத்தவும் எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.