வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய், மிளகாய் பொடி, மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்.
சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் குணமும் வெந்தயத்துக்கு இருக்கிறது. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 25 வயது முதல் 52 வயது வரை உள்ள 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என 45 நாட்களுக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹார்மோன் அளவு, தாம்பத்திய உறவில் ஆர்வம் ஆகிவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு பிரிவினருக்கு வெந்தயம் அல்லாத வெறும் சாறு கொடுக்கப்பட்டது.
வெந்தய சாறு குடித்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள், ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. வெறும் சாறு குடித்தவர்களின் ஹார்மோன் உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். திருமணமானவர்கள் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியுடனும் இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.