Saturday, July 2, 2011

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  கேசரி பவுடர்!

வீட்டில் எளிதாகச் செய்யும் இனிப்பு கேசரி. முந்திரிப் பருப்பு, திராட்சை என அதில் சேர்க்கப்படுகிற பொருட்களில் சுவையும், சத்தும் அதிகம். ஆனால் கேசரி என்றால் அது மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணமாகத்தான் இருக்கிறது."இப்படி கேசரியைக் கலராகத்தான் சாப்பிட வேண்டுமா? கேசரியில் சேர்க்கப்படும் கேசரி பவுடரில் கார்ஸினோஜன் என்ற பொருள் இருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது'' என்கிறார் சித்த மருத்துவரான சிவராமன். சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள ஆரோக்யா சித்த மருத்துவமனையில் இருந்த அவரிடம் பேசினோம்.
"குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் கலரிலும் கார்ஸினோஜன் இருக்கிறது. ஆனால் நிறையப் பேருக்கு இது தெரிவதில்லை. கலர் கலராக உள்ள பொருட்களைச் சாப்பிடுவதிலும், அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதிலும் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை'' என்ற அதிர்ச்சி உண்மையைச் சொல்கிறார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.