Monday, March 12, 2012

கிரிக்கெட் ரசிகர்களுக்கு.....


இங்கிலாந்து சண்டே டைம்ஸின் அதிரடி செய்தி. 2011 உலக கோப்பை இந்திய, பாகிஸ்தான் அரையிறுதியில் சூதாட்டம் -பொலிவூட் நடிகை

இந்திய, பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய கடந்த ஆண்டின் உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்தின் "சண்டே டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்தியாவைச் சேர்ந்த சூதாட்டக்காரர்கள் இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளிலும், சர்வதேசப் போட்டிகளிலும் இலகுவாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வதேச கிரிக்கெட் சபை இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வழங்கப்படும் ஏராளமான பணத்தின் காரணமாக போட்டிகளின் முடிவுகளை முன்னரே தீர்மானிப்பது இலகுவாக உள்ளதாகத் தெரிவித்த குறித்த பத்திரிகை, வீரர்களுக்கு ஏராளமான ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வீரர்களை சூதாட்டத்தின் பக்கம் இழுப்பதற்கு பொலிவூட் நடிகையொருவரைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளில் இந்தியச் சூதாட்டக்காரர்கள் முயன்று வருவதாக அப்பத்திரிகை தனது இன்றைய செய்தியில் தெரிவித்துள்ளது.
சண்டே டைம்ஸின் செய்திகளின்படி தங்கள் விசாரணைகளில் துடுப்பாட்ட வீரரொருவர் மெதுவாகத் துடுப்பெடுத்தாட 44,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களும், அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுக்க பந்துவீச்சாளர்களுக்கு 50,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களையும், போட்டிகளின் முடிவுகளை மாற்றுவதாக உறுதிப்படுத்தும் வீரருக்கு 750,00 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களும் வழங்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விக்ரம் செத் என்ற சூதாட்டக்காரர் ஒருவரே குறித்த பத்திரிகையிடம் சிக்கியுள்ளதாகவும், அவர் மூலமே இத்தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
லங்காநவ்..

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.