வத்திராயிருப்பு : கின்னஸ் சாதனைக்காக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா உலகின் நீண்ட நேரம் இயங்கும் "கம்ப்யூட்டர் கேம்' உருவாக்கியுள்ளான்.
வத்திராயிருப்பில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான் டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன். தாயார் ஆக்னெலின் இடைநிலை ஆசிரியை. இவர்கள், மகனின் ஆர்வத்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விட்டனர். தனது திறமையால் சி ப்ளஸ், விசுவல் பேசிக், லாங்வேஜ் வரை விரைவில் கற்றான். 2010 பிப்ரவரியில் கின்னஸ் சாதனைக்காக புதிய சாப்ட்வேர்களையும், அதில் எட்டு "கேம்'களை வடிவமைத்தான். இவை கின்னஸ் அமைப்பின் முதல்கட்ட தேர்வில் தேர்வாகி அடுத்தகட்ட பரிசீலனையில் உள்ளது. அடுத்த சாதனையாக உலகிலேயே மிக நீண்ட நேரம் இயங்கக்கூடிய "பவர் மைண்ட்' என்ற கேம் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளான். இதுகுறித்து நேற்று வத்திராயிருப்பில் பலர் முன்னிலையில் விவரித்தான்.
டெனித் ஆதித்யா கூறியதாவது: இது ஞாபக சக்தியை வளர்க்கும் "நியூமெரிக்கல் கேம் சாப்ட்வேர்'. பொழுதுபோக்கு "கேம்'களில் அதிகபட்சம் "10 ஸ்டேஜ்' வரை இருக்கும். நான் வடிவமைத்தது 570 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளையாடக்கூடியது. இதன் மொத்த அளவு "52 கேபி' மட்டுமே, என்றான்.
Thanks To.......Dhinamalar.
மேஸ்ட்ரோஸ் மெடிலைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒரு அதி நவீன பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செல்போனாக மட்டுமல்லாமல், ஈசிஜி எடுத்துப் பார்க்கும் வசதியையும் கொண்டுள்ளது என்பதே இதன் விசேஷம்.இந்த பிளாக்பெர்ரி செல்போனின் பெயர் eUNO R10. வோடபோன் சேவையில் இந்த அதி நவீன வசதி இயங்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனில், கையடக்கமான, ஈசிஜி கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதை கையில் கட்டிக் கொண்டு ஈசிஜி பார்க்கலாம். பின்னர் இதன் முடிவுகளை வயர்லைன் ஏஅல்லது ஜிஎஸ்எம் செல்போன் மூலம் நமது டாக்டருக்கு அனுப்பி வைத்து அவருடையை ஆலோசனையைப் பெற முடியும்.
அதாவது எந்த லேபுக்கும்,டாக்டரிடமும், மருத்துவமனைக்கும் செல்லாமல் நாமே ஈசிஜி பார்த்து ஆலோசனையை டாக்டரிடம் செல்போன் மூலமே பெற முடியும்.
இருப்பினும் பிளாக்பெர்ரி செல்போன்களில் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். அதாவது நாம் எடுக்கும் அந்த ஈசிஜி அறிக்கை பிளாக்பெர்ரியின் சர்வருக்குப் போய் அங்கிருந்து டாக்டர் வைத்துள்ள பிளாக்பெர்ரிக்குப் போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன வசதி, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வோடபோன், பிளாக்பெர்ரி சேவைகளைக் கொண்டோர் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும்.
Thanks To.....Vaavimakal


கேட்டது கொடுக்கும் மணிமேகலையின் அட்சயபாத்திரத்தைப் போன்றதுதான் இந்த Google-ம். எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து தகவல்களையும் கேட்ட நேரத்தில், கேட்ட மாத்திரத்தில், கேட்டவிதத்தில் அள்ளித்தருவது Google-தான். வெறும் தேடுபொறியாக அறிமுகமான Google இப்பொழுது அதனையும் தாண்டி பல சேவைகளை உயர்தரத்துடன் இலவசமாக வழங்கி வருகிறது. அவற்றுள் பலவற்றைப் பற்றி அறிமுகமிருந்தாலும், சில இன்னும் பலரால் அறியப்படாமலேயே இருப்பதினால் அவற்றைப்பற்றியதான ஒரு சிறு அறிமுகம்.
மிகையாகாது.அத்தகைய Office Application தான் இந்த Google Docs. இதில் Word, Powerpoint,Excel என அனைத்தும் உள்ளன. எந்தவொரு கோப்பையும் உடனடியாக PDF வடிவத்தில் மாற்றிக்கொள்ளலாம். MS Office நமது கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நேரடியாக இணையத்திலேயே இத்தகைய கோப்புகளை உருவாக்கலாம். இதனால் கோப்புகளை எந்த இடத்திலும் எளிதாக பெற முடிகிறது. ஒரு கோப்பினுள் பலரும் கூட ஒரே நேரத்தில் பணியாற்றவும், பயன்படுத்தவும், மாற்றவும் முடியும். மேலும் விவரங்களுக்கு
இணையதளங்களை காசுகொடுத்து உருவாக்க வேண்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. மேலும் இணையதளங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக அறிவும் இனி தேவையில்லை.மிக எளிதாக Google sites-ல் நம் விருப்பத்திற்கு ஏற்ப இணையதளங்களை உருவாக்கலாம். வலைப்பூக்கள் கூட இலவசம் என்றாலும் அதில் நாம் கோப்புகளை பதிவேற்ற முடியாது. ஆனால், Google sites-ல் எத்தகைய கோப்புகளையும் பதிவேற்ற முடியும். பார்வையாளர்களை கட்டுப்படுத்த முடியும். அவர்களின் கருத்துக்களை/விமர்சனங்களை பெறமுடியும். ஆரம்பகட்ட பயனாளர்கள், இத்தகைய இலவச வசதியினை பயன்படுத்திகொள்வது சிறந்தது. பொதுவாக Google sites, கீழ்க்கண்டவற்றுக்கு மிகவும் உகந்தது.
இன்றைய வேக உலகில், எதனையும் திட்டமிட்டு நடத்திச்சென்றாலும் கூட, தவறுகள் சில ஏற்படத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் நினைவில்கொள்வது என்பதும் காரிய சாத்தியமில்லாததும் கூட. பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று திட்டு வாங்கியது கூட உண்டு. ஆனால், Google Calendar பயன்படுத்துவதால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அனைத்து நிகழ்ச்சிகளையும் இதில் பதிவு செய்துவிட்டால் போது. உரிய நேரத்தில், SMS, Pop-up,Email என நமது வசதிக்கேற்ப தகவலை அளித்துவிடும். மேலும் விவரங்களுக்கு
நமது இனிய தருணங்களை என்றும் நினைவுபடுத்தும் அதிசயம் தான் புகைப்படங்கள். நாம் ரசித்த காட்சிகளை மீண்டும் நம்முன்னே கொணடுவரும் இத்தகைய புகைப்படங்களை பத்திரமாக சேமித்துவைக்க சுமார் 1.5 GB இடம் Google-ஆல் இலவசமாக தரப்படுகிறது. விருப்பமிருப்பின், இத்தகைய புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். என் இணையதளத்தின் இடத்தை சேமிக்க நான் பயன்படுத்துவது Google Picaso தான். கட்டுரைகளுக்கு தேவைப்படும் புகைப்படங்களை இதில் ஏற்றிவிட்டு, பின் இணைப்பை மட்டும் இணையபக்கத்தில் தந்துவிடுவதினால் ஏராளமான இடம் சேமிக்கப்படுகிறது. புகைப்படங்களை வகைவகையாக பிரித்துவைக்கவும், தேவையானபொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.