Sunday, May 30, 2010
நம்பமுடியாத குகை வீடுகள் - ஆப்கானிஸ்தான்
கடலுக்கு அடியில் அமைச்சரவைக் கூட்டம்!
மாலைதீவில் புதுமை நிகழ்ச்சி
மாலைத்தீவு அமைச்சரவை கூட்டம், கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடந்தது. உலகிலேயே கடலுக்கு அடியில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் வெப்பமயமாகி வருவதால் துருவப் பகுதியில் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் 2100ஆம் ஆண்டில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் என, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்திருந்தது.
ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து நூறடிக்கும் குறைவான உயரத்தில் உள்ளது இத்தீவு .எனவே, இந்த பயங்கரத்தை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், என்பதை வற்புறுத்துவதற்காக நேற்று முன்தினம் மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடந்தது. தலைநகர் மாலேவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிபுஷி தீவில், ஆறு மீட்டர் ஆழத்தில் அதிபர் முகமது நஷீத்(42) தலைமையில் கடலுக்குள் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர்கள் அனைவரும் கடலில் முத்தெடுக்கும் வீரர்களை போன்ற உடையுடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 45 நிமிடம் இவர்கள் கடலுக்கு அடியில் இருந்தனர். அமைச்சரவைக் கூட்டம் 25 நிமிடங்கள் நடந்தது.”உலகம் வெப்பமடைவதால் எங்கள் நாடு கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்ற உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும்’ என, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அமைச்சர்கள் தங்கள் கையில் இருந்த வெள்ளைப் பலகையில் எழுதி தங்கள் கருத்தை தெரிவித்துக் கொண்டனர்.
கடலுக்கு அடியில் தங்கியிருப்பதற்காக, இந்த அமைச்சர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கடலில் மூழ்கும் பயிற்சி பெற்றனர். மாலத்தீவு நூற்றுக்கும் அதிகமான தீவுகளை உள்ளடக்கியது. இதில் 90 சதவீத தீவுகள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ளது.
நன்றி,நிதர்சனம்
செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை
லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான ஜியோர்ஜி டேவிஸ், சோனி எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான ஆயத்த ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது.
இந்த உடையை ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா லண்டனில் அறிமுகப்படுத்தினார்.
தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிரும் உடையை உருவாக்கியதாகவும், செல்போனில் உள்ள புளூ-டூத் வசதியைப் பயன்படுத்தி, இந்த ஒளிரும் உடை செயல்படுவதாகவும் ஜியோர்ஜி கூறியுள்ளார்.
பொதுவாக, டிஸ்கோதே, பார் உள்ளிட்ட அதிக சப்தம் நிறைந்த இடத்தில், செல்போன் அழைப்பு வந்தால் அது சம்பந்தப்பட்டவருக்கு கேட்காது. இதனால் அந்த அழைப்பு மிஸ்டு கால் ஆகிவிடுவதுண்டு.
சில முக்கியமான அழைப்புகளை கூட நாம் தவறவிட்டு விடுவது உண்டு. இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒளிரும் உடையை வடிவமைத்தேன் என்கிறார் ஜியோர்ஜி.
நன்றி,தமிழழகன்
கவலையில்லாத மனிதன்
அங்கங்கள் அனைத்தையும் அழகாய் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக.
புதிய இலவச ஆன்டிவைரஸ்
நம் கணினியை பாதுகாக்க பலவிதமான இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவி இருப்போம் .சிலர் பாதுகாப்பு கருதி காசு கொடுத்து மென்பொருளை நிறுவி இருப்பார்கள்.நாம் நிறுவிய ஆன்டிவைரஸ் மென்பொருளால் கணினியின் வேகம் வெகுவாக குறைவதை கண்கூடாக பார்க்கின்றோம்.இதற்கெல்லாம் மாற்றாக மைக்ரோசாப்ட் வழங்குகின்றது Microsoft Security Essentials முற்றிலும் இலவசமாக.
இது மைக்ரோசாப்டின் முந்தைய பாதுகாப்பு மென்பொருள்களான Windows Live OneCare and Windows Defender மாற்றாகும்.
இதன் சிறப்பு அம்சங்கள் :
1. தரவிறக்க இலகுவானது 10 mb மட்டுமே.
2. ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே பதிந்து விடலாம்.
3. தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
4. கணினியின் வேகம் குறையாது.
5. முழுமையான பாதுகாப்பு Spyware,Malware மற்றும் வைரஸ் போன்றவற்றில்லுருந்து.
1. விண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.
2. உங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்.
நன்றி.முதல்மனிதன்
Saturday, May 29, 2010
EZ உந்துகணை விமானம்
இதற்கமைவாக, 2004 ஆம் ஆண்டில், குறைந்த செலவில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவல்ல விண்விமானம் ஒன்று SpaceShipOne என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. விமானம் போன்று தரையிலிருந்து மேலெழவல்ல இந்த விண்விமானம், விண்வெளியில் பயணிக்கவல்ல உந்துகணை (rocket) ஒன்றை புவியிலிருந்து 46000 தொடக்கம் 48000 அடிகள் உயரம் வரை காவிச்சென்று பின் உந்துகளை விண்விமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விண்வெளிவினுர்டான மீதிப் பயணத்தைத் தொடரும். தொடர்ந்து அந்த உந்துகணை பயணித்து, மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது பூமியின் வளிமண்டலத்தினுட் பிரவேசித்து ஒரு மிதவைவானூர்தி (glider) போன்று பயணித்து புவியை அடையும்.
இவ்வாறில்லாது, உந்துகணை ஒன்று விமானம்போன்று தரையிலிருந்து மேலெழுந்து விண்வெளிக்குச் சென்று பின் திரும்பவும் விமானம் ஒன்றைப்போன்று தரையிறங்கவல்லதாக இருக்கவேண்டும் என்ற இலக்கை நோக்காகக் கொண்டு XCOR Aerospace என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதே இந்த EZ உந்துகணை (EZ Rocket) ஆகும். இந்த EZ உந்துகணையானது இன்னமும் பரிசேதனை நிலையிலேயே காணப்படுகின்றது.
2001 இல் முதலாவது பறப்பை மேற்கொண்ட இந்த EZ உந்துகணையானது. Rutan's Aircraft Factory இனாலல தயாரிக்கப்பட்ட canard aircraft என்றழைக்கப்படும் விமானத்தை மீள்வடிவமைப்புச்செய்யப்பட்டே உருவாக்கப்பட்டது. இந்த மீள்வடிவமைப்புச் செய்யப்பட்ட விமானத்தில் உந்துகணை ஒன்றின் செயற்பாட்டுக்குரிய பின்வரும் அமைப்புக்கள் காணப்படுகின்றன.
- விமானத்தின் பின்பகுதியில், சுழலி இயந்திரத்திற்கு மாற்றீடாக திரவ எரிபொருளில் இயங்கும் இரண்டு உந்துகணை இயந்திரங்கள் (ocket engines)
- அழுத்தப்பட்ட திரவ எரிபொருளை (isopropyl alcohol) நிரப்பவல்ல எரிபொருட் தாங்கி.
- திரவ ஒட்சிசனுடன் கூடிய இரண்டு தாங்கிகள்.
தொடர்ந்து இந்த உந்துகணையின் தொழிற்பாடு பற்றிப் பார்ப்போம். விமானி இயந்திர இயக்கத்தை ஆரம்பித்ததும் உயர் அழுத்தத்திலுள்ள மதுசார (alcohol) எரிபொருள் இயந்திரத்தினுட் செலுத்தப்பட, திரவ ஒட்சிசன் ஆனது பம்பி (pump) ஒன்றின்மூலம் இயந்திரத்தினுட் செலுத்தப்படும். தொடர்ந்து மின்எரிபற்றி (electrical igniter) ஒன்றின் மூலமாக எரிபொருள் எரியூட்டப்பட்டு இயந்திரத்தின் செயற்பாடு தொடக்கி வைக்கப்படும். இயந்திரங்கள் இரண்டினூடாகவும் 800 பவுண்ட்ஸ் உந்துவிசை உருவாக்கப்படும். இவ்விசையின் காரணமாக இந்த EZ உந்துகணைகானது 20 செக்கன்களில் 1650 மீற்றர் தூரம் ஓடுபாதையில் ஓடி தரையிலிருந்து மேலெழும். இந்த EZ உந்துகணையானது சாதாரண விமானங்கள் போன்று மேலெழவோ அல்லது பறக்கவோ வல்லதாகக் காணப்பட்ட போதிலும், பின்வரும் வில விடையங்களில் சாதாரண விமானங்களிலிருந்து மாறுபட்டும் காணப்படுகின்றது.
- இவ்விமானம் 2 நிமிடங்களில் 195 நொட்ஸ் வேகத்தை எட்டவல்லதாகக் காணப்படுகின்றது. (மிகையொலி வேகத்தாரை விமானங்கள் தவிர்ந்த சாதாரண விமானங்களால் இந்த வேகத்தை எட்ட முடியாது).
- ஒரு நிமிடத்தில் 10000 அடி உயரத்தை எட்டவல்லது.
- ஆகக்கூடியது 10000 அடிகள் உயரம்வரை பறக்கவல்லது.
- பறந்துகொண்டிருக்கும் போது விமானி உந்துகணை இயந்திரத்தை நிறுத்தகோ மீண்டும் மறுபடி இயக்கவோ முடியும்.
- எரிபொருள் தீர்ந்தபின்னர் இந்த விமானத்தால் மிதவை வானூர்தி போன்று தரையிறங்க முடியும்.
நன்றி,ஈழநேசன்
புதிய ஸ்பைஸ் போன்கள்
மியூசிக் போன்கள் வரிசையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டு போன்களை வெளியிடுகிறது. இந்த மாதம் வெளிவர இருக்கும் இவை எம் 6464 மற்றும் எம்6262 என அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு போன்களிலும் யமஹா ஆம்ப்ளிபையர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பது இவற்றின் சிறப்பு. இதில் உள்ள எம்பி3 பிளேயருக்கு ஒரே கீயில் இயக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ புளுடூத் வசதி உள்ளது. இதனுடைய மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். டூயல் சிம் எம் 6464 போனில் 2 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இருப்பதுடன், எப்.எம். ட்ரான்ஸ்மீட்டரும் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அலைவரிசையில் இதிலிருந்து பாடல்களை ஒலிபரப்பலாம். போனை அசைத்தால் பாடல்கள், வால் பேப்பர்கள், கேம்ஸ் ஆகியவை மாறுகின்றன. போனிலேயே ibibo, Reuters, Opera Mini, Mobile Tracker, mgurujee ஆகியவை பதிந்து தரப்படுகின்றன. ஹிந்தி ஆங்கிலம் கலந்து இதில் டெக்ஸ்ட் டைப் செய்திட முடிகிறது. எம் 6262 போனில் வீடியோ கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் ibibo, Opera Mini, SMS Scheduler, Privacy Lock ஆகியவை தரப்படுகின்றன. தேவையற்ற எண்களிலிருந்து வரும் அழைப்புகளையும் இதில் தடுக்கும் வசதி உள்ளது. |
Facebook இன் புதிய வரவு.
குரல்வழி மற்றும் முகம் பார்த்து அரட்டை வசதி அறிமுகம் |
அதிரடியாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் ஆகிய Facebook நீண்டகாலமாக பரீட்சார்த்த நிலையில் இருந்த குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat) பண்ணும் தொழில்நுட்பத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னமும் Beta நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. FriendCam Video Chat என்னும் பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது சில அடிப்படை பிரச்சனைகளை இன்னும் நிவர்த்திசெய்யவில்லை. Beta நிலையிலுள்ளமையினால் இது காலப்போக்கில் சரிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. |
Friday, May 28, 2010
எச்சரிக்கை!!!!
Michael Jackson புதிய ஈ-மெயில் வைரஸ்
மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மெயில் கூறுகிறு. அடடா, என்று ஆச்சரியப்பட்டு திறந்து பார்த்தால் அவ்வளவதுதான், கம்ப்யூட்டர் காலியாகி விடுகிறதாம்.sarah@michaeljackson.com என்ற முகவரியிலிருந்து அந்த மெயில் அனுப்பப்படுகிறது.இந்த மெயிலைத் திறந்து பார்த்தால் நமது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது, யுஎஸ்பி மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம்.அதேபோல மைக்கேல் ஜாக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.ஜாக்சன் ரசிகர்களே, ஜாக்கிரதை...
நன்றி,எதிரி
மைக்ரோசொப்டின் புதிய மென்பொருள்
எப்பொழுதும் புதியதாக யோசிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பு இது.
நம் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்தானே. அது போல நாம் ஒரு கம்ப்யூட்டர் கேம்சை உருவாக்கினால், அப்படிதான் யோசித்தது மைக்ரோசாப்ட். அதன் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் கோடு (KODU)
இதனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை உருவாக்கிவிடும். மைக்ரோசொப்டின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்கது.
கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல். இந்த சாப்ட்வேர்ஐ பயன்படுத்தி மைக்ரோசொப்டின் Xbox எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.
உலகில் 2010ஆம் ஆண்டு சிறந்த வாழ்க்கைத் தரமுடைய நகரங்கள்!
உலகில் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த வாழ்க்கைத் தரமுடைய முதனிலை நகரமாக வியன்னாவும், இரண்டாம் மூன்றாம் நிலைகளை சூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுவிஸ்லாந்து சூரிச் (19), ஜெனீவா (25) மற்றும் பேர்ன் ஆகிய நகரங்கள் உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரமுடைய பத்து நகரங்களில் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பேர்ன் சிறந்த வாழ்க்கைத் தரமுடைய நாடுகளின் வரிசையில் ஒன்பதாம் நிலை வகிக்கின்றது.உலகின் 221 நாடுகளில் சிறந்த வாழ்க்கைத்தரம் மற்றும் ஆபத்தான நகரங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உலகில் மிகவும் ஆபத்தானதாக நகரமாக ஈராக்கின் பக்தாத் நகரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி, நெருப்பு
Thursday, May 27, 2010
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்
சென்னையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் நட்டி சாதனை படைத்துள்ளார். |
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த தம்பதி சங்கரன்&அமுதா. இவர்களின் மகன் சந்தோஷ்குமார் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். சிறு வயதில் இருந்தே மலை ஏற்றத்தில் ஆர்வம் கொண்டவர். மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிளான்க், நியூசிலாந்தில் உள்ள சோ யூ, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமன்ஞாரோ ஆகிய சிகரங்களில் ஏற்கனவே ஏறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, உலகிலேயே மிக உயரமான இந்தியாவின் எவரெஸ்ட் சிகரத்தையும் ஏறி சாதனை படைக்க திட்டமிட்டார். மார்ச் 29ம் தேதி, சென்னையில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். காத்மண்டுவில் இருந்து 30ம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை தொடங்கி, மே 23ம் தேதி சிகரத்தின் உச்சியை அடைந்தார். சிகரத்தின் உச்சியில் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் வைத்தார். இதன் மூலம் ‘எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்’ என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார். சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சந்தோஷ்குமார் இறங்கிக் கொண்டு இருக்கிறார். நாளை (28ம் தேதி) அவர் காத்மண்டு வந்துவிடுவார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். |
எட்டு உலக சானைகளுக்கு சொந்தக்காரர் - பரீத் நசீர் காலமானார்.
எட்டு உலக சானைகளுக்கு சொந்தக்காரரான யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட பரீத் நசீர் 24 .05 .2010 ல் தனது 56 வது வயதில் புத்தளத்தில் காலமானார்.இன்னாலில்லாஹி...
வேக நடை, யாழ்ப்பானத்திலிருந்து ஹம்பாதோட்டைக்கு துவிச்சக்கர வண்டியை பின் புறமாக ஓட்டியமை, 500 நச்சு பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்களாக பந்தைத்தட்டி சாதனை படைத்தமை, ௩ நாட்களாக தொடர்ச்சியாக ஒற்றைக்காலில் நின்றமை போன்ற சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.
இது தவிர பூல் டூம் நடனம்,நான்கு நாட்களாக தொடர்ச்சியாக நடனம்,௭௨ மணித்தியாலங்களாக கை கோர்த்து நடனம் ஆடியமை ஆகிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
இவரின் மகானான உலக சாதனையாளரான கடந்த வருடம் ஜூலை மாதம் 23ம் திகதி உலக சாதனையொன்றை மேற்கொண்டிருந்த வேளை விஷப்பாம்பு தீண்டி மரணமானார். இன்னாலில்லாஹி...
இவரது இன்னொரு மகனும் உலக சாதையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி,www.tamilwin.org
தென்கொரியாவில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட வடகொரிய பெண் உளவாளி
வடகொரியாவை சேர்ந்தவர் கிம் (36). பெண் உளவாளி. இவர் தென் கொரியாவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் அவசர காலங்களில் பயன் படுத்தப்படும் சுரங்க பாதைகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தார்.
இதை அறிந்த தென் கொரிய அதிகாரிகள் பொறி வைத்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை 5 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர்.
தகவல்களை சேகரிக்க தென்கொரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் “செக்ஸ்” லீலையில் ஈடுபட்டு இருக்கிறாள். இந்த தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவள் சீனா மற்றும் லவோஸ் வழியாக தென் கொரியாவுக்குள் நுழைந்து, ஆன்லைன் மூலம் சுரங்கப்பாதை ஊழியர் ஒருவருடன் காதல் நாடகமாடி அவரை சீனாவுக்கு வரவழைத்து இருக்கிறாள்.
பின்னர் அவர் கொடுத்த தகவலின் மூலம் தென் கொரியாவுக்குள் நுழைந்து தனது உளவு வேலையில் ஈடுபட்டாள். இந்த தகவலை தென்கொரியா அதிகாரி ஓசென்-இன் தெரிவித்துள்ளார்.
நன்றி,www.z9world.comதங்கத்தை பெற்றுக் கொள்வதற்கான “ஏ.டீ.எம்." இயந்திரம்
| |||
Thanks To.....www.z9world.com | |||