பழத்தின் சுவை புளிப்போ, துவர்ப்போ… உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… அதில்லை சங்கதி. ‘கிவி ப்ரூட்’ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. இதை நம்மூரில் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். தமிழில் அதன் பெயர் பசலிப்பழம்.
அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது:
கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.
விட்டமின் சி&யின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.
Thanks To........Meenakam
nalla karuthu sonnathukku thx
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,நன்றிக்கும் நன்றி.
ReplyDelete