Wednesday, June 30, 2010

காதுகளை மூடித் திறக்கும் அதிசய சிறுவன் _

கண்களை மூடித் திறக்கலாம்; வாயை மூடித் திறக்கலாம்; காதை மூடித் திறக்க முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கின்றான் 9 வயதே ஆன சிறுவன் ஒருவன்.
கோவை மாவட்டத்தில் இந்தச் சிறுவனின் அரிய செயலைப் பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட்டின் கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவரது மகன் பிரேம்குமார்(9) என்பவரே இந்த அதிசயத்தைச் செய்து காட்டுகின்றார்.
அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர், தன் இரண்டு காதுகளையும் காதுக்குள் சொருகி வைத்து சக மாணவர்களை அசர வைக்கிறார். இரவு நேரத்தில் தூங்கும் போது, இவரது இரண்டு காதுகளும் மூடிய நிலையில் இருக்கும். காலையில் எழுந்ததும் காதுகள் தானாக திறந்து விடும்.
சிறுவன் எப்போது வேண்டுமானாலும் காதை காதுக்குள் சொருகி வைத்துவிட்டு, தன் படிப்பை முழு கவனத்துடன் படிக்கின்றார். தனித்திறமை கொண்ட இவரது செயலை சக மாணவர்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் பொழுது போக்காக வேடிக்கை பார்க்கின்றனர்.

2 comments:

  1. இப்படியெல்லாம் இருக்காங்களா...

    ஆச்சர்யம்தான்...

    ReplyDelete
  2. ஆமாம் அகல்விளக்கு,
    உண்மையாகவே ஆச்சரியப்படக்கூடிய விடயமே.தங்களின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.