Wednesday, June 30, 2010

'ரெப்' இசை மூலம் கணித பாடம் கற்பிக்கும் அமெ. ஆசிரியர்

அமெரிக்காவில் 'ரெப்' இசைமூலம் கணிதபாடம் கற்பிக்கின்றார் ஆசிரியர் ஒருவர்.
லாமார் குயின் (26) என்பவரே இவ்வாறு இசை மூலம் கணித பாடத்தைக் கற்பிக்கின்றார். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த இவர் 'ரெப்' இசைப் பாடல்கள் அடங்கிய வீடியோவை திரையில் ஓட விட்டுக் கணித பாடம் நடத்துகிறார்.
கணிதம் பல மாணவர்களுக்குப் பிடிக்காத பாடமாக உள்ளது. குறிப்பாக அதில் உள்ள அல்ஜிப்ரா என்ற பாடப் பிரிவைப் படிக்க மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, அமெரிக்காவில் 'ரெப்' இசை மூலம் அல்ஜிப்ரா கணித பாடத்தை மாணவர்களுக்கு மிக எளிதாக இவர் கற்றுத் தருகிறார்.
இந்தப் பாட திட்டத்தை 8ஆவது வகுப்பு மாணவர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். 'ரெப்' இசை வீடியோ மூலம் பாடம் நடத்துவதால், மாணவர்கள் மிக எளிதாகக் கணிதத்தை புரிந்து கொள்கின்றனர்.
கணித பாடத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த மாணவர்கள் தற்போது தேர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த முறையில் பாடம் நடத்தும் திட்டம் அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவி வருகிறது .
Thanks To....Virakesary

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.