லட்சக்கனக்கான பேஸ்புக் பயனாளர்களிடையே அவர்களது புரோபைல் மூலமாக ஸ்பாம் மாதிரியான வார்ம் (worm) ஒன்று மிக வேகமாக பரவிவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு முன்னர் இதோ தன்மையில் மற்றொரு வார்ம் பரவியிருந்தாலும் அதை கட்டுபடுத்தி விட்டதாக பேஸ்புக் அறிவித்தது. ஆயினும் தற்போது மீண்டும்
"LOL This girl gets OWNED after a POLICE OFFICER reads her STATUS MESSAGE."
"This man takes a picture of himself EVERYDAY for 8 YEARS!!"
"The Prom Dress That Got This Girl Suspended From School."
"This Girl Has An Interesting Way Of Eating A Banana, Check It Out!"
என்ற மெஸேஜ்கள் கொண்டு பரவுகின்றது.
மேலுள்ள விடயங்களுடன் காணப்படும் லிங்க்குகளை கிளிக் செய்ததும் வெறும் "Click here to continue" என்ற எழுத்துக்கள் மட்டுமுள்ள பக்கம் ஒன்று திறக்கும் அதன் மீதோ அல்லது அப்பக்கத்தின் எந்த பகுதியில் கிளிக் செய்ததும் உடனடியாக உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் பேஸ்புக் புரோவைலில் இதே போன்ற மெஸெஜ்களை உடனே பரப்பிவிடுகிறது இந்த வார்ம்.
அண்மையில் பேஸ்புக் புதிதாக லைக் (Like) செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய பின்னரே இவ்வகையான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
மேலுள்ள சொற்கள் கொண்டு வரும் இணைப்புக்கள் மீது கிளிக் செய்யவேண்டாம் என்று பேஸ்புக் தனது பயனாளர்களை கேட்டுள்ளது.
Thanks To.....4Tamilmedia
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.