மனிதர்களைப் போல எல்லா வேலைகளையும் செய்யும் மனித எந்திரங்களைக்கண்டுபிடிப்பதில் ஜப்பான் விஞ்ஞானிகள் மிகுந்த புத்திசாலிகள்.
அவர்களுக்கு இணையாக இப்போது பிரிட்டிஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் ரோபோக்களைத் தயாரிப்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஏற்கனவே பல்வேறு விதமான ரோபோக்களை(மனித எந்திரங்களை) கண்டுபிடித்துள்ள பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், தற்போது ,மனிதர்களைப்போல முகபாவங்களைக் காட்டும் புதிய ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்ருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் நாட்டில் உள்ள பிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தப் புதிய ரோபோவைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த ரோபோவுக்கு ஜுலஸ்' என்றும் பெயர் வைத்திருக்கிறார்ள். இந்த ரோபோவின் தலை, மனிதனின் தலையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மனிதர்களைப் போலவே முகபாவங்களைக் காட்டும். அதேபோன்று உதடுகளையும் மனிதரைப் போலவே அசைக்கும்.
றப்பர் தோல்களைப் பயன்படுத்தி மனிதத் தலைகளைப் போல தேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி டேவிட் ஹேன்சன் என்பவரும் இந்த ரோபோ வடிவமைப்புக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுக்கு உதவிசெய்திருக்கிறார். இந்த மனித எந்திரத்தின் தலையில் 34 மோட்டார் இயக்கிகள் உள்ளன. இந்த மோட்டார் இயக்கிகளைப் பயன் படுத்தித்தான் இந்த ரோபோ தனது முகத்தில் மனிதர்களைப் போன்ற பாவங்களைக் காட்டுகிறது.
மனிதர்களின் முக அசைவுகளை வீடியோ படமெடுத்து அதை அடிப்படையாக வைத்துத்தான், இந்த ரோபோவின் றப்பர் முகத்தில் எப்படி அசைவுகளை ஏற்படுத்துவது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற மோட்டார்களை ரோபோவின் தலையில் பொருத்தியிருக்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இதற்காக இவர்கள் தங்களது சொந்த மென்பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருள் வாயிலாகத்தான் இந்த ரோபோ தனது முகபாவங்களைக் காட்டுகிறது. அதாவது வீடியோ கமெராவில் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டுள்ள அசைவுகளை வைத்து இந்த ரோபோ பிரதி பலிக்கிறது. கேலிச்சித்திர வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியையும் இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மனித முக பாவங்களுக்கும் இந்த ரோபோ முக பாவங்களுக்கும் எந்த வேறு பாடும் இல்லாத அளவுக்கு இது செயற்படுகிறது.
நெற்றியை உயர்த்தும், புருவங்களை மேலே உயர்த்தும், சிரிப்பு அசைவுகளைக் காட்டும், கோபத்தை வெளிப்படுத்தும். என்றாலும் உண்மையான மனித முகத்தில் உள்ள சதை அசைவுகளை அவ்வளவு துல்லியமாகக் காட்ட முடியாது. அதற்கு இன்னும் கொஞ்சம் கலைநுணுக்கம் இந்த ரோபோவின் முகத்தில் தேவைப்படுகிறது.
ஆனாலும் பரவாயில்லை. மனிதர்களைப் போலவே முகபாவங்களை காட்டுகிறது என்பதில் மட்டும் நாம் திருப்தி அடையலாம்.
மொத்தத்தில், இது கொப்பி அடிக்கப்பட்டு செயற்படும் ரோபோவாகத்தான் இருக்கும். இந்த ரோபோ வினாடிக்கு 25 முகபாவங்களை வேகமாகக் காட்டும்.
மனித முக பாவங்களைக் காட்டும் ரோபோக்கள் வந்துவிட்டதைப்போல, மனிதர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் செய்யும் ரோபோக்கள் விரைவில் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
Thanks To...........Marikumar
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.