Friday, July 30, 2010

100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது

அண்மையில் அமெரிக்க உளவுத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம்.
தற்போது த பைரட் பே என்ற இணையத்தளத்தில் 100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருங்கே திரட்டி தரவிறக்குவதற்கேற்ற வகையில் வெளியிட்டுள்ளனர்.
இவ்வளவு தகவல்களையும் வெளியிட்டவர் thepiratebay.org இணையத்தளத்திற்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும்
Ron Bowes என்பவரே ஆவார்.
பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங்க் மூலமாக தனது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்காதவர்களிடமிருந்தே அவர்களது தகவல்களை திரட்டியதாக Ron Bowes தெரிவித்தார் எனவும் இதற்காக விஷேட கணனி நிரலிகளை உருவாக்கி அதைக்கொண்டு எல்லா பேஸ்புக் புரொவைலையும் ஸ்கான் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை பிரைவசி செட்டிங்க் மூலம் மாற்றங்கள் செய்து பாதுகாப்பாக வைக்காதவர்கள் இனிமேல் மாற்றியும் பலனில்லை என்றும் தெரியவருகிறது.
இந்த குற்றச்சாட்டுக்களை பலமாக மறுத்த பேஸ்புக் இவ்வாறு இணையத்தில் கசிந்த தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் இருப்பவைதான் என்று தெரிவித்துள்ளது.
தெரிந்த நண்பரின் தகவலை வைத்து பேஸ்புக்கில் தேடும்போது கிடைக்க கூடிய தகவல்களே இவை என்றும் பேஸ்புக் தெரிவித்தது. அண்மையில் தான் பேஸ்புக் சுமார் அரை பில்லியன் பாவனையாளர்களை எட்டியது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.