Friday, July 30, 2010

சீனாவில் 110 கோடி பேரிடம் டெலிபோன்கள்.



சீனாவின் மக்கள் தொகை 130 கோடி ஆகும். இவர்களில் 110 கோடி பேரிடம் டெலிபோன் இருப்பதாக தெரியவந்து உள்ளது. டெலிபோன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் முடிய உள்ள 5 மாதங்களில் டெலிபோன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 110 கோடி ஆனது.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில் 4 கோடியே 8 லட்சம் டெலிபோன்கள் அதிகரித்து உள்ளன. இந்த கால கட்டத்தில் `லேண்டுலைன்’ போன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 78 லட்சம் குறைந்து 30 கோடியே 60 லட்சம் ஆகவும், மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 85 லட்சம் அதிகரித்து 79 கோடியே 60 லட்சம் ஆனது.
இணையதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 11 கோடியே 30 லட்சம் ஆகும்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.