Google இணைய நூலகம்
வாசிப்பின் மூலம் நிறைய விடயங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதனாலோ என்னவோ, வாசிப்பு மனிதனை பரிபூரணமாக்கும் என்று கூடச் சொல்லுவார்கள். நிறைய வாசிக்கும் பழக்கமுள்ள ஆர்வலர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி கூகிள் (Google) நிறுவனம் தொடரறா நூலகமொன்றை (Online Library) ஏற்படுத்தி யுள்ளது. இந்த நூலகத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கூட PDF (Portable Document Format) நிலையில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இருந்த போதும் பதிப்புரிமை செய்யப்பட்டு (Copyrighted Editions) நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது. கூகிள் தேடலில் எந்த விடயம் தொடர்பான புத்தகங்களையும் தேடி அவற்றை பதிவுகளை செய்து கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
ஆயினும் பதிப்புரிமை செய்யப்பட்ட நூல்களை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியை இலவசமாக வாசிக்க முடியும்படி நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகிலுள்ள சகல புத்தகங்களையும் இலக்கமிட்டு மக்களுக்கு அவை பயன்தரக் கூடிய வகையில் நிரல்படுத்துவதே தமது தலையாய நோக்கமென கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.