அண்மையில் பிரான்ஸில் ஓர் அரிய மாற்றமொன்றை மருத்துவர் ஒருவர் செய்திருக்கிறார். ஜெரோம் என்ற 35 வயதுடைய நபருக்கு மரபணுக் கோளாறினால் முகம் விகாரமாகக் காணப்பட்டது. இதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்த ஜெரோம், டொக்டர் லோரன்ட் லான்டியரி (Laurent Lantieri) என்பவரை அணுகி தனது முகத்திற்கு சிகிச்சையளிக்குமாறு வேண்டினார்.
அவரது வேண்டுகோளை சவாலாக எடுத்துக்கொண்ட மருத்துவர் தனது மருத்துவ குழுவுடன் சத்திர சிகிச்சைக்குத் தயாரானார். இறந்துபோன ஒருவரது முகத்தினை எடுத்து பாதிக்கப்பட்டவரின் முகத்திற்கு ஏற்றவிதத்தில் பிளாஸ்டிச் சிகிச்சை செய்திருக்கிறார்.
மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. உலகில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட முகமாற்று சிகிச்சை என்ற பெருமையையும் தட்டிச் சென்றிருக்கிறது. விகாரமான முகத்தினைக் கொண்டிருந்த ஜெரோம் இப்பொழுது புன்சிரிப்போடு காணப்படுகிறார்.
Thanks To....Ilakkiya
Face off படம் நியாபகத்திற்கு வருகிறது...
ReplyDeleteஅகல்விளக்கு அவர்களுக்கு,
ReplyDeleteFace ஆப் சம்பந்தமாக குறிப்பிட்டமைக்கும்,வருகைக்கும் நன்றிகள்.