Wednesday, July 14, 2010

சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்.

சென்ற வாரம் சாம்சங் (Samsung) நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை மொபைல் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. வேவ் மற்றும் காலக்ஸி எஸ் என அழைக்கப்படும் இந்த போன்களின் விலை முறையே இந்திய ரூ. 19,100 மற்றும் ரூ.31,500 ஆகும். வேவ் மொபைல் போன் சாம்சங் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், காலக்ஸி எஸ் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன.
இந்த போன்கள் "பதா'' வரிசை போன்கள் என அழைக்கப்படுகின்றன. கொரிய மொழியில் "பதா''என்றால் கடல் என்று பொருள். இந்த வரிசையில் அறிமுகப்படுத்தப்படும் போன்கள் அனைத்தும் சாம்சங் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து பல புரோகிராம்களை இயக்கிப் பயன் படுத்தலாம். இன்டர்நெட் மூலமும் இவற்றைப் பெறலாம். இந்த இரண்டு போன் திரைகளிலும் மிக அருமையான அமோலெட் (AMOLED) ) டிஸ்பிளே தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட்டு, துல்லிதமான காட்சி கிடைக்கிறது.
இவற்றின் ப்ராசசர் 1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுவதால், கிராபிக்ஸ் மற்றும் வீடியோ காட்சிகள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன. இதில் தரப்பட்டுள்ள டச்விஸ் 3 பதிப்பு, போன்களைப் பயன் படுத்துவதனை மிக எளிதாக் குகிறது.
நன்றி,தமிழ் CNN

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.