காரில் பயணிப்போரின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு பல புதிய தொழிநுட்ப அம்சங்களை தமது கார்களில் உள்ளடக்கவுள்ளதாக ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிஷான்’ அறிவித்துள்ளது.
இதன்படி கார்களிலுள்ள குளிரூட்டீகளினூடாக விட்டமின் ‘சி’ யை விசிற உத்தேசித்துள்ளதாகவும் இது பயணிகளின் உடற்தோளினை ஈரலிப்பாகப் பேண உதவுமெனவும் இதன்மூலம் வெளியில் இருப்பதை காரினுள் ஆரோக்கியமாக உணரமுடியுமெனவும் அதன் பொறியியலாளர் தெரிவித்தார்.
உடலினுள் இதனோடு இரத்த ஓட்டத்தை சீர்செய்யக்கூடியதும் முதுகு வலியை குறைக்க கூடியதுமான இருக்கைகளையும் பொருத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் நவீனமயப்படுத்தப்பட்டதும் முக்கிய நாட்களை நினைவு கூறக்கூடியதுமான வேகமானிகளையும் பொருத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவற்றிற்கு மேலதிகமாக ‘என்டி கொலிசன்’ எனப்படும் விமானம் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ‘ராடர்’’ தொழிநுட்பத்திற்கு இணையான தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது. இத்தொழில்நுட்பமானது விபத்து ஒன்று நிகழக்கூடிய அபாயமிருப்பின் அது தொடர்பாக பயணிக்கு சமிக்ஞைகளை எழுப்பி எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.
அதிக போட்டித்தன்மை கொண்ட கார் சந்தையில் நிஷான் நிறுவனத்தின் இத்தொழில்நுட்பங்கள் அதன் போட்டியாளருக்கு தகுந்த போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.