அமேசான் காடுகள் அழியக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு சாதனை நடைபயணம்.
இந்த ஆற்றுக்குள் நடப்பது அவ்வளவு எளிதானதல்ல. கொசுக்கள் , அனகோண்டா, தேள் என பல பூச்சிகள் நிறைந்த ஆறு இது. உலகத்திலேயே பெரிய ஆறான இதை முழுவதுமாக வெற்றிகரமாக கடந்து சென்று வடக்கு பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் எட் ஸ்டேப்போர்ட்.
பெரு நாட்டின் தெற்கு கடலோர பகுதியில் இருந்து 859 நாட்களுக்கு முன்பு தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் 18 அடி நீளமுள்ள முதலைகள், மிகப்பெரிய அனகோண்டாக்கள், உடல்நலக்குறைவு, உணவு பற்றாக்குறை, மரண அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை தாண்டியே இந்த சாதனையை படைத்துள்ளார். 2 ஏப்ரல் 2008 இல் எட் ஸ்டேப்போர்ட்டும் அவர் நண்பரும் இணைந்து நடக்க ஆரம்பித்தனர்.
மூன்று மாதங்களில் அவர் நண்பர் நடப்பதை நிறுத்தி விட்டார். எட் ஸ்டேப்போர்ட் தன்னுடைய நடைபயணத்தை ஆங்காங்கே தான் சந்திக்கும் மனிதர்களின் உதவியுடன் தொடர ஆரம்பித்தார். 5 மாதங்கள் நடந்த பின்னர் பெருவில் உள்ள காடுகளில் பணியாற்றும் ரிவேரா என்பவரும் இவருடன் இணைந்து நடக்க ஆரம்பித்தார். இருவரும் இதுவரை இணைந்து நடந்துள்ளனர்.
செல்லும் வழிகளில் எல்லாம் இவர்கள் சாப்பிட்டது பீன்ஸ் மற்றும் அரிசியினால் ஆன உணவுகள்,. அவ்வப்போது கிடைக்கும் மீன்களையும் பிடித்து சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த பயணத்திற்காக ஸ்டேப்போர்ட்டுக்கு 63,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது. ஆதரவாளர்கள் அளித்த பணத்தின் மூலமே இதை சரிக்கட்டியுள்ளார்.
நடைபயணம் தொடங்கிய நாள் முதலாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய வலைப்பூவில் இது குறித்த படங்களையும் போட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
34 வயதாகும் எட் ஸ்டேப்போர்ட் முன்னாள் பிரித்தானிய ராணுவ தளபதிகளில் ஒருவர். தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளும் , அமேசான் ஆறும் அழிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி அமேசான் ஆற்றுக்குள் 4000 மைல்கள் நடந்து இன்று சாதனை படைத்தார்.வீடியோ
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.